Header

Sri Lanka Army

Defender of the Nation

28th May 2021 13:00:31 Hours

களுத்துறையில் அதிகளவு தொற்றாளர்கள் இணங்காணல்

இன்று காலை (29) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,850 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்களில் 05 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர் என்பதுடன் ஏனைய 2,845 பேரும் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் அவர்களில் அதிகமான தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தில் அறியப்பட்டுள்ளதுடன், அறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 512 ஆகும். கம்பஹா மாவட்டத்தில் 443 தொற்றாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 281 பேரும் அறியப்பட்டுள்ளனர். 1609 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் அறியப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (29) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 177,710 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 80,610 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்கள். அவர்களில் 146,361 முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 27,412 வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சனிக்கிழமை (29) வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் இடைநிலை பராமரிப்பு மையங்களிலிருந்து 2,573 வெளியேறினர். இலங்கைக்குள் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 03 ஆகும். அதன்படி இன்று (29) காலை வரையில் நாட்டில் பதிவான மொத்த கொவிட் – 19 மரணங்களின் எண்ணிக்கை 1,363 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று (29) காலை 0600 வரையில் 18 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 500 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர். இன்று (29) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 61 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,169 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று (29) காலை இவ் அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பிரிவுகள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், பயணத்தடையானது மீள் அறிவிப்பு வரையில் நீடிக்கப்படும்.