Header

Sri Lanka Army

Defender of the Nation

28th May 2021 11:30:31 Hours

வெசாக் தினத்தில் இராணுவ தலைமையக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கொழும்பு உதவியற்றவர்களுக்கு உதவி

ஞானம் பெற்றவரின் போதனைக்கு அமைவாக தாராள மனப்பான்மை, அன்பு- இரக்கம் மற்றும் ஆத்மாக்களிடம் உண்மையான இரக்கத்தினை காண்பித்தல், தத்துவார்த்த ரீதியான உன்னதமான 'வெசாக்' பருவகாலத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவலை தடுப்புக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலுக்கமைய இராணுவ தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் குழு, (28) பயணத் தடை காரணமாக தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கொழும்பில் உதவியின்றி வீதிகளில் இருப்போருக்கு இலவச உணவு பொதிகள் மற்றும் குடிநீர் போத்தல்களையும் வழங்கினர்.

இராணுவ தலைமையகத்தில் சேவையாற்றும் அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள், மகளிர் அதிகாரிகள் , மகளிர் வீரர்களும் உதவியற்ற மக்களை அணுகி அவர்களுக்கு உதவிகளை வழங்கினர். கொழும்பு-கோட்டை, பெஸ்டியன் மாவத்தை, பிரதான வீதி, மருதானை, கிரேண்ட்பாஸ் மற்றும் பொரளை போன்ற பகுதிகளின் உதவியற்ற மக்கள், பெண்கள் மற்றும் யாசகர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.