Header

Sri Lanka Army

Defender of the Nation

28th May 2021 10:30:31 Hours

3 வது இலங்கை சிங்கப்படை மற்றும் 19 வது தேசிய பாதுகாப்பு படை ஆகியவைகளால் நிறுவப்பட்ட இடைநிலை பராமரிப்பு நிலயைம் ரம்பொடவில் இயங்குகிறது

நுவரெலியா ரம்பொடை தொண்டமான் கலாசார நிலையத்தின் ஓர் அரசாங்க கட்டிடம் அண்மையில் இலங்கை 3 வது சிங்கப்படை மற்றும் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் சிப்பாய்களால் கொவிட் - 19 பரவல் அதிகரக்கும் பட்சத்தில் பாவனை செய்யக்கூடிய 275 கட்டில்களுடன் கூடிய இடைநிலை பராமரிப்பு நிலையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் , தேசிய இளைஞர் மன்றம் – கந்தே - எல, மீபிலிமான (150-கட்டில்கள்), பிரதேச மருத்துவமனை – வலப்பனை (87-கட்டில்கள்), தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனம்- பொகவந்தலாவ (146-கட்டில்கள்) மற்றும் மாநகர சபை மண்டபம் – நுவரெலியா (500-கட்டில்கள்) என்பன எந்தவொரு அவசர நிலைக்கும் முகம்கொடுக்ககூடிய இடைநிலை பராமரிப்பு நிலையங்களாக நிறுவப்பட்டுள்ளன.

மேற்படி நிலையத்தை இடைநிலை சிகிச்சை மையமாக மாற்றியமைக்க கௌரவ தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களினால் இடமளிக்கப்பட்டதுடன், நுவரெலியா மாவட்டச் செயலக அதிகாரிகள், கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், நுவரெலியா சுகாதார துறை ஊழியர்களின் ஆதரவுடன் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய இடைநிலை சிகிச்சை மையம் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா அவர்களால் முறையாக சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மேற்படி இடைநிலை பராமரிப்பு நிலையத்தை கட்டமைக்கும் பணிகள் 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே, 112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திஸநாயக்க, இலங்கை சிங்கப்படையின் கட்டளை அதிகாரி மேஜர் அசித ரணதிலக ஆகியோரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் நுவரெலிய மாவட்டச் செயலாளர் திரு ஜீகேஜீஏஆர்பிகே நந்தன, கொத்மலை பிரதேச செயலாளர் திருமதி ஓஎஸ் பெரேரா, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். மானதுங்க மற்றும் மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரும் நிகழ்வில் பங்கெடுத்தனர்.