Header

Sri Lanka Army

Defender of the Nation

26th May 2021 07:09:33 Hours

9 வது பீரங்கி படையினர் நீர் கொதிகலன்கள் மற்றும் பாதுகாப்பு டோர்ச் லைட்கள் பரிசளிப்பு

கந்தக்காடு இடைநிலைப் பராமரிப்பு நிலையத்திற்கு அதன் தேவைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு 9 இலங்கை பீரங்கி படையினர் வியாழக்கிழமை (20) 5 நீர் கொதிகலன்கள் மற்றும் 3 பாதுகாப்பு டோர்ச் லைட்களை பரிசளித்தனர்.

வைத்தியசாலை பணியாளர்களின் வசதியின் பொருட்டு 233 வது பிரிகேட் தளபதி கர்ணல் வசந்த ஹேவகேயின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பரிசு வழங்கப்பட்டது.