Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2021 16:20:01 Hours

வன்னி சுகாதார அதிகாரிகள் வைரஸ் கட்டுப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு

வன்னி மாவட்ட கொவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார தலைமையில் வௌ்ளிக்கிழமை (21) வவுனியா மாவட்ட செயலக அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வவுனியா மாவட்ட செயலாளர் திரு எஸ்.எம்.சமன் பந்துலசேன வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர், மாவட்ட சுகதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்.

மாவட்டத்தில் கொவிட் – 19 தொற்றுநோய் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இக் கூட்டத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வைத்தியர் ஏ.லவன் விளக்கினார்.

அதனைடுத்து பங்கேற்பாளர்கள் நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் கூட்டுறவுச் சங்கம் ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை தடையின்றி விநியோகித்தல், விவசாயிகள் தங்களது பயிர் செய்கைகளை முன்னெப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குதல் என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதுடன், தொற்றுக்கு உள்ளானர்களை அடையாளம் காண்பதன் மூலம் நோய் பரவலை மட்டுப்படுத்தல் குறித்தும் ஆராயப்பட்டது.