Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2021 20:54:37 Hours

கண்டி புற்றுநோய் சங்கத்தினால் 11 வது படைப்பிரிவுக்கு அன்பளிப்பு வழங்கல்

இலங்கை புற்றுநோய் கழகத்தின் கண்டி கிளையினால் கண்டி பிராந்திய கொவிட் - 19 பரவல் தடுப்பு பணியில் ஈடுப்படும் 11 வது படைப்பிரிவு தலைமையகத்துக்கு கிரிமி நாசி தெளிக்கும் உபகரணங்கள், தனிநபர் பாதுகாப்பு அங்கிகள், கட்டில் விரிப்புகள் என்பன செவ்வாய்க்கிழமை (20) வழங்கி வைக்கப்பட்டன.

தற்போதும் 11 வது படைப்பிரிவு தலைமையகத்தின் கீழ் 9 தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் 6 இடைநிலை பராமரிப்பு நிலையங்களும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட கொவிட் – 19 பரவல் தடுப்பு பணிகளின் ஒருங்கிணைப்பாளரான மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களிடம் மேற்படி அன்பளிப்புக்களை இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கண்டி கிளைத் தலைவர் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டன.

சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் யூ. ரத்னமலல அன்பளிப்புக்களை நன்கொடையாளரிமிருந்து பெற்றுக்கொண்டதன் பின்னர், அவற்றை தலைமையகத்தின் தளபதியிடம் கையளித்தார்.