Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2021 18:00:01 Hours

அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளின் (கட்டம் 1) நிறைவு

அனர்த்த முகாமைத்தும் செயற்பாடுகள் தொடர்பில் உபித்தகம மற்றும் களனி கங்கை கரையில் ஆகிய பிரதேசங்களில் திங்கட்கிழமை (25) நடத்தப்பட்ட ‘எக்சைஸ் ரீஷ் ரோவ்’ என்ற 5 நாள் பயிற்சிகளை காண்பதற்கு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவசர நிலைமைகளின் போது அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல் மற்றும் அனர்த்தங்களை தவிர்த்தல், மீட்பு நடவடிக்கைகளின் போதான முகாமைத்துவம் (நீர், வரையறுக்கப்பட்ட இடங்கள், கயிறு போன்றவை) என்பவற்றை மையப்படுத்தியதான இந்த பயிற்சிகள் அமைந்திருந்தன. மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுடன் கலந்தாலோசித்து 14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா வழங்கிய வழிகாட்டலின் கீழ் பயிற்சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் முதற் கட்டம் உபித்தகம மற்றும் களனி பகுதிகளில் மோட்டார் படகோட்டும் தளங்களில் கையாளுகை மற்றும் திட்டமிடல் தொடர்பிலான ஐந்து நாள் பயிற்சிகள் வௌ்ளிக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டன.

அதேபோல் ஆரம்ப கட்டத்தின் போது 6 வது இலங்கை பீரங்கிப் படை, 8 வது இலங்கை இலேசாயுத காலட் படை, 8 வது கள பொறியியல் படை மற்றும் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையின் பங்கேற்புடன் தேடல் மற்றும் மீட்பு தொடர்பில் மிகவும் தேர்ச்சி பெற்ற சிறப்பு படையின் இரு குழுவினர் தங்கள் திறமையான மற்றும் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்டதுடன் பயிற்சியின் அடுத்த கட்டமும் அதே இடத்தில் தொடங்கவுள்ளது.

14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவா சேனரத் யாப்பா 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் லால் விஜேதுங்க, 141 வது பிரிகேட் வாசல லியனவடுகே மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.