Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2021 15:50:01 Hours

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு

இன்று காலை (25) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,971 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டவர் என்பதுடன் ஏனைய 2,970 பேரும் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் அவர்களில் அதிகமான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அறியப்பட்டுள்ளதுடன், அறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 605 ஆகும். களுத்துறை மாவட்டத்தில் 472 தொற்றாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 395 பேரும் அறியப்பட்டுள்ளனர். 1,498 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் அறியப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (25) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 167,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 70,162 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்கள். அவர்களில் 139,946 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 24,772 வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை (25) (கடந்த 24 மணி நேரத்தில்) 1,296 பேர் முழுமையாக குணமடைந்து பராமரிப்பு நிலைய்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மரணித்த ஐவருடன் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1,243 ஆக உயர்ந்துள்ளது.

இன்று (25) காலை 0600 வரையான காலப்பகுதியில் 11 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 401 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர். இன்று (25) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 69 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,322 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (25) காலையிலிருந்து அம்பலங்கொடை பொலிஸ் பிரிவின் ஊரவத்த 80, கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் ஈரியவெடிய, சந்திரிகம மற்றும் சந்திரிகம தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பண்னை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தனிமைப்படுத்தபட்டிருந்த இங்கிரிய பொலிஸ் பிரிவின் மஹா இங்கிரிய கிராம சேவகர் பிரிவின் ரைகம குடியிருப்பு, ரைகம கிராம சேவகர் பிரிவின் ரைகமவத்த கீழ் பிரிவு மஹா இங்கிரிய கிராம சேவகர் பிரிவின் ரைகம்புற, சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவின் கல்அமுன, பொலிஸ் பிரிவின் இணைப்பு 122 E, ஹெலமுல்ல 123 G, வெல்லவாய பொலிஸ் பிரிவின் எத்திலிவெவ, இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் ரத்கம 162 F, குருவிட்ட பொலிஸ் பிரிவின் குருவிட்ட 155 மற்றும் தெல்கமுவ கிராம சேவகர் பிரிவின் நகர பகுதி 155,வத்தளை பொலிஸ் பிரிவின் மத்துமாகல, ஹேகித்த பொலிஸ் பிரிவின் ஹேகித்த கிராம சேவகர் பிரிவின் அத்கம் குடியிருப்பு தொகுதி, அல்விஸ் வத்த, தேசிய குடியிருப்பு தொகுதி மற்றும் கொக்டேன் மாவத்தை தவிர்ந்த ஏனைய பிரிவுகள், கெரவலபிட்டிய பொலிஸ் பிரிவின் கெரவலபிட்டிய கிராம சேவகர் பிரிவின் ஜோர்ஜ் மாவத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகள் மற்றும் கட்டான பொலிஸ் பிரிவின் கட்டுகஹாவெல ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 பொலிஸ் பிரிவுகளின் 14 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்று (25) காலை இவ்வறிக்கை வெளியிடுகையில் சில தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மாற்றமில்லாத போதிலும் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுபாடு இன்று காலை (25) 0400 மணி முதல் இரவு 2300 மணி வரை தளர்த்தப்பட்டள்ளது.