Header

Sri Lanka Army

Defender of the Nation

27th May 2021 22:16:42 Hours

சீதுவை கர்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான வசதிகள் குறித்து வைத்திய நிபுணர்கள் இராணுவத்தின் சேவைக்கு பாராட்டு

தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் குறித்த மூத்த வைத்திய நிபுணர்களின் ஒருங்கிணைந்த குழு கூட்டம் வைத்தியர் திருமதி எச்.எஸ்.ஆர்.பெரேரா, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய நிபுணர் திருமதி சித்ரமலி டி சில்வா, குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் வைத்தியர் சமன் ரஜிந்திரஜித், ஆலோசகர் சிறுவர்களுக்கான நோய் தொற்று தொடர்பான ஆலோசகர், வைத்தியர் சுரந்த பெரேரா, இலங்கையின் மகப்பேற்று கழக தலைவர் வைத்தியர் சனத் லனேரோல் ஆகியோரை இராணுவத் தலைமையகத்திற்கு திங்கள்கிழமை (24) அழைப்பித்திருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகின்ற போது இலங்கையில் இறப்பு வீதம் குறைந்த அளவில் காணப்படுவதாகவும், அதற்கான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் சரியான மூலோபாயச் செயற்பாடுளுக்கு பாராட்டு தெரிவித்த நிபுணர் குழுவினர், தாய்மார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி சில பகுதிகளில் சிறு குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவது அதிகமாக உள்ள நிலையில், அவர்களை பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, விஷேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள 1200 கட்டில்களுடன் கூடிய சீதுவை இடைநிலை பராமரிப்பு நிலையம் மற்றும் புதிய வைத்தியசாலையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதற்குள் அவசர சிகிச்சை பிரிவு, தனிமைப்படுத்தல் பிரிவுகள், மீட்பு அலகுகள், மருந்தகங்கள் போன்ற சகல வசதிகளையும் உள்ளடங்கியிருப்பதாகவும். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புக்கமைய அவசர கால திட்டமிடலின் கீழ் சீதுவையில் நிறுவப்பட்டு இடைநிலை பராமரிப்பு மையத்தை விரையில் செயற்படுத்த முயற்சிகளை முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

அத்தோடு அச்சுறுத்தல் காலத்தில் தாய்மார் மற்றும் குழந்தைகள் பராமரிப்புக்கு அவசியமான வசதிகளை மேம்படுத்த அவசியமான நிதியை திரட்டுவதற்கான நிதியமொன்றும் ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும். தற்போதைய நிலையில் பயணத்தடை காலத்தில் எவ்வாறு நடந்துகொள்வது மற்றும் எவ்வாறு பாதுகாப்பை பெறுவது என்பது தொடர்பிலான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இத்திட்டத்திற்கு கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் வழங்கிய ஆதரவுக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் மருத்துவ நிபுணர்கள் குழு செவ்வாய்க்கிழமை (25) ஆம் திகதிக்குள் சீதுவையிலுள்ள இடைநிலை பராமரிப்பு நிலையம் / வைத்தியசாலையை வசதிகளை பார்வையிட தீர்மானிக்கப்பட்டதுடன் சுகாதார அமைச்சின் அதிகாரிளுடன் கலந்துரையாடி உடனடியாக குறித்த வைத்தியசாலையை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.