Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2021 14:35:01 Hours

கொவிட் – 19 தடுப்புக்கான குழு கூட்டத்தில் சிக்கல்கள் குறித்து மீளாய்வு

ராஜகிரிய கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அலுவலகத்தில் இன்று (24) காலை நடைபெற்ற கூட்டத்தில் கொவிட் -19 தடுப்பு பொறிமுறை தொடர்பான பல்வேறு சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமாக ஆராயப்பட்டது. பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சய முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாயர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தேசிய தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த ஜயவிக்கிரம, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் மனோஜ் வீரசிங்க கொவிட் – 19 தடுப்புக்கான செயல்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் சந்தன அரங்கல மற்றும் இராணுவ மருந்து விநியோக பிரிவின் பணிப்பாளர் கேணல் சவின் சேமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது செயலணியின் தலைவர் பொது சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகளை மேம்படுத்தல், சுகாதார அமைச்சிடம் அதற்கான ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் சுகதார வைத்திய பிரிவு மற்றும் பொது சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்வதற்கு கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அதற்கான உதவிகளை வழங்குகிறது. குறிப்பாக மேற்படி அதிகாரிகளுடனான அடிப்படை தொடர்புகனை ஏற்படுத்த முடியாமல் இருந்தமையின் காரணமாக சுகாதார வைத்திய பிரிவுகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிப்புக்களை விடுப்பது கடினமாக அமைந்திருந்ததென ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேற்படி பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதோடு புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டியதன் அவசியத்தையும் அதனை தாமதிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்தார். அதேபோல் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொள்ள முடியாமையால் இறப்புக்கள் ஏற்படும் போது உரியவர்களின் குடும்பங்களுக்கு விபரங்களை அனுப்புவதில் தாமதம் ஏற்படுதல், தொற்று உறுதியான நோயாளிகளுக்கான பீசிஆர் பரிசோதனைகள் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள், பொது சுகாதார பரிசோதகர்களுக்கான தேவைகளை வழங்குதல் மற்றும் கொவிட் – 19 தடுப்புக்கான செயலணியுடன் தகவல்களை சரியாக பரிமாற்றிக்கொள்ளல் என்பன தொடர்பில் மேற்படி சந்திப்பில் ஆராயப்பட்டது.

தற்போதுள்ள உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு அலைவரிசைகளை மேம்படுத்தி அது தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் பங்கேற்பாளர்கள் உறுதியளித்தனர். அத்தோடு தற்போதைய நிலைமைக்கமைய கட்டுப்பாடுகளை விதித்தல், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, அடுத்தகட்ட சவால்கள், எதிர்காலச் செயற்பாடுகளுக்கான வழிகாட்டல்கள் தொடர்பிலும் அவர் வலியுறுத்தினார்.