Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2021 15:13:01 Hours

சொப்ட்லொஜிக் தனியார் நிறுவனத்தின் விளையாட்டுக் கழகத்தின் உதவியில் சிறுநீரக நோயாளிகளுக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம்

கொவிட் – 19 வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களின் ஒப்பீடு செய்ய முடியாத பங்களிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சொப்ட்லொஜிக் காப்புறுதி தனியார் நிறுவனத்தினால் இராணுவத்திலுள்ள சிறுநீரக நோயாளர்களுக்கு அவசியமான இரத்தம் மாற்றும் இயந்திரமொன்று இன்று (24) பிற்பகல் இராணுவ வைத்தியச்சாலைக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த நன்கொடை, கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டது.

நன்கொடை நிறுவனத்தின் பிரதிநிதிகான, விநியோக முகாமையாளர் திரு. ரொஷான் சூரியராச்சி, மாற்றலை அலை பிரதித் தலைவர் திரு கே.புஷ்பகுமார, மைக்ரோ காப்புறுதி விளையாட்டு கழக பிரதி தலைவர் திரு நதீக லக்ஷன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், கொழும்பு இராணுவ மருத்துவமனையின் சிறுநீரக வைத்திய நிபுணர் டாக்டர் கர்ணல் சஞ்சய ஹெயந்துதுவவும் கலந்து கொண்டார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அடையாளமாக நன்கொடை ஏற்றுக்கொண்டார். நன்கொடையாளர்களின் கொவிட் -19 பரிமாற்றத்திற்கு எதிராக முப்படை வீரர்களின் பங்கைப் பாராட்டி இந்த நன்கொடை வழங்கப்பட்டது. அதற்காக தளபதியினால் அவர்கள் பராட்டப்பட்டனர். இந்த நன்கொடை இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க ஒருங்கிணைத்திருந்தார்.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.