Header

Sri Lanka Army

Defender of the Nation

26th May 2021 04:09:33 Hours

வங்கியின் நிதியுதவி மற்றும் இராணுவ தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் முல்லேரியாவில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவு

புதிய சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவு கொழும்பு கிழக்கு வைத்தியசாலையை அடிப்படையாக கொண்டு முல்லேரியாவில் சுகாதார அமைச்சினால் (21) காலை திறந்து வைக்கப்பட்டது. தேசிய சுகாதார உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேற்டி பிரிவு திறக்கப்பட்டுள்ளதுடன், கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கம் வகையிலும், நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக சிகிச்சைகளை அளிப்பதற்காகவும் 8 அறைகள் 150 கட்டில் வசதிகளை கொண்டதாக சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

செலான் வங்கி பி.எல்.சி நிறுவன ஊழியர்களின் ஆதரவுடன் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் குறித்த சிறப்பு சிகிச்சை பிரிவானது இலங்கை இராணுவத்தின் 1 வது பொறியியல் சேவை படையினரால் நிர்மாணிக்கப்பட்டது. அத்தோடு இராணுவத்தின் தொழில்நுட்ப முகாமைத்துவம் மற்றும் மனித வள உதவிகள் வழங்கப்பட்டதால் தேசத்தின் பெருந்தொகையான நிதியை சேமித்துக்கொள்ளவும் முடிந்துள்ளது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் கௌரவ திருமதி பவித்ரா வன்னியராச்சி , கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் செலான் வங்கி பிஎல்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபில ஆரியரத்ன ஆகியோர் பெயர் பலகையை திறந்து வைத்தனர். கொவிட் – 19 தொற்றுநோயிலுருந்து மீள்வதற்காக சுகாதார அமைச்சு மேற்படி சிகிச்சை பிரிவை நிறுவியுள்ளது.

ஆரம்ப நிகழ்வின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க மற்றும் செலான் வங்கியின் சிரேஷ்ட ஊழியர்கள், வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முல்லேரியா சிறப்பு தீவிர சிசிச்சை பிரிவில் ஐடிஎச் தொற்று நோயியல் வைத்தியசாலையில் இருப்பதை போன்று 3 புதிய தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டில்கள் மற்றும் இரண்டு சிகிச்சைகளுக்கான கட்டில்களையும் கொண்டுள்ள ஐடிஎச்க்கு நிகரான இரண்டாவது வைத்தியசாலை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலை மற்றும் அமைச்சினால் கூட்டாக சமர்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகளை கருத்தில் கொண்டு செலான் வங்கி பிஎல்சி நிறுவனத்தினால் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்துடன், அந்த திட்டத்தை குறைந்த செலவில் முன்னெடுக்க இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் உதவியை சுகாதார அமைச்சு கோரியிருந்தது.

அதன்டி இலங்கை இராணுவத்தின் பொறியியல் சேவை பிரிவினரின் மனித வளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை கொண்டு ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலின் படி திட்டம் நிறைவு செய்யப்பட்டது.

4 நோயாளிகளுக்கு உயர் தரமான சிகிச்சை வழங்ககூடிய வகையிலான பகுதிகளை கொண்ட இந்த சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவு அதிகபட்சம் 5 முதல் 6 கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதி மற்றும் சிறப்பு தொற்று கட்டுப்பாட்டு அழுத்த அமைப்பு அலகு பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதலில் சுமார் 50 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தாலும், இராணுவ ஆதரவு காரணமாக முழு செலவு சுமார் 13 மில்லியனுக்கு குறைத்துக்கொள்ள முடிந்தது. இதேபோல், இராணுவ வீரர்களுடன் கைகோர்த்துக் கொள்ளும் போது அந்த இடத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக செலான் வங்கி தொழில்நுட்ப அதிகாரிகளால் உதவி வழங்கப்பட்டது.

இதன் போது இராணுவத் தளபதிக்கு சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கி இராணுத்தின் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதே சந்தர்ப்பத்தில் ஜெனரல் ஷவேந்திர சில்வா படையினரின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் திட்டத்தை மேற்பார்வை செய்த அதிகாரவாணை அற்ற அதிகாரிக்கும் நினைவு பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறருக்கு சிகிச்சை அளித்து வரும் இந்த மருத்துவமனைக்கு இந்த பிரிவு ஒரு பெறுமதி மிக்கதாகவும் கொவிட் -19 அல்லாத நோயாளிகளுக்கு எளிதாக மற்றும் பாதுகாப்பாக சிகிச்சையை வழங்குவதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது.