Header

Sri Lanka Army

Defender of the Nation

11th May 2021 20:33:16 Hours

இராணுவத்தினரால் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள்

கடந்த சில மணிநேரங்களில் பெய்த மழையின் காரணமாக ருவன்வெல்ல மைனொலுவ பிரதேசத்தில் உள்ள குடா ஓயா, ஆற்றின் வெள்ள பெறுக்கெடுத்ததையடுத்து வௌ்ளத்தில் பாதிக்கப்பட்ட 13 பொதுமக்களை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 611 பிரிகேட்டின் 8 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினர் இன்று காலை (14) மீட்டெடுத்தனர்.

நான்கு குடும்பங்களைச் சேர்ந்த அந்த 13 பொதுமக்களும் அதிகாலை 3.00 மணியளவில் வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். வெள்ள நீர் அதிகரித்ததை தொடர்ந்து இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விரைவாக மீட்டு பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, 61 ஆவது படைப் பிரிவின் தளபதி மற்றும் 611 ஆவது பிரிகேட் தளபதி ஆகியோர் தற்போது வெள்ளம் மற்றும் புயல் காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்பார்வையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 611 பிரிகேட்டின் 8 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினர் நேற்று மாலை (13) வரகாபொல கஸ்வான பகுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் மழையின் காரணமாக நிலச்சரிவில் புதையுண்ட இரண்டு நபர்களை மீட்டெடுத்தனர்.

ஆனாலும், இந்த மீட்பு பணியின் போது புதையுண்ட இருவரில் ஒருவர் இறந்து நிலையில் காணப்பட்டார். பாதிக்கப்பட்ட மற்றவர் மேலதிக சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பலியானவரின் உடல் பொலிஸாரின் உதவியுடன் அதே வைத்தியசாலையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.