Header

Sri Lanka Army

Defender of the Nation

10th May 2021 12:37:33 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவு புதிய கொவிட் -19 வைத்தியசாலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் அன்பளிப்பு

வேகமாக பரவும் கொவிட் - 19 வைரஸைக் கட்டுப்படுத்தும் தேசிய பணியின் உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருமதி சுஜீவா நெல்சன் தலைமையிலான இராணுவ சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை (9) காலை சீதுவையில் இராணுவத்தால் உருவாக்கப்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையில் எதிர்காலத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றவர்களுக்காக மருந்துகள், சலவை இயந்திரங்கள், தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதன பெட்டிகள், தையல இயந்திரங்கள மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.

1200 கட்டில்கள் கொண்ட அனைத்து நவீன சுகாதார வசதிகளுடன் கூடிய அதிநவீன இடைநிலை பராமரிப்பு நிலையம் மற்றும் வைத்தியசாலையானது கொவிட் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டும் இலங்கையர்களுக்கு அவசரகால சுகாதார சேவையை இலவசமாக வழங்கும் நோக்கத்துடன் விரைவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிராண்டிக்ஸ் குழுமம் இத்திட்டத்திற்கான இடவசதியினை இராணுவத்திற்கு இலவசமாக வழங்கிய பின்னர் இராணுவ சேவை வனிதையர் பிரிவு (ASVU) இந்த திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஒத்துழைப்பினை வழங்கியது.

அதன்படி திருமதி சுஜீவா நெல்சனுடன் நன்கொடையாளர்கள் குழு புதிய வைத்தியசாலையினை பார்வையிட்டு அதன் கட்டளை அதிகாரியிடம் குறித்த நன்கொடைகளை வழங்கியது.

14வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா, 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் லால் விஜேதுங்க, இராணுவ சேவை வனிதையர் பிரிவு கேணல் ஒருங்கிணைப்பு கர்ணல் துஷார பாலசூரிய மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு அணியை வரவேற்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.