Header

Sri Lanka Army

Defender of the Nation

29th April 2021 20:32:17 Hours

பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி மற்றும் முப்படைத் தளபதிகள் விமான நிலையத்தில் சீன பாதுகாப்பு அமைச்சரை வழியனுப்பினர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு), கமல் குணரத்ன பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்ன , விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரன, இலங்கைக்கான சீனத் தூதுவர் மேதகு கீ ஷென்ங்ஹெங் சீன தூதுவராலய அதிகாரிகள் மற்றும் இராணுவ உயர அதிகாரிகள் ஆகியோர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த சீன மக்கள் குடியரசின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங்கி அவர்களை இன்று (29) கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வழியனுப்பினர்.

அவர் இலங்கையில் தங்கியிருந்தபோது, ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், வெளியுறவு அமைச்சின் செயலாளர், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் ஆகியோர் அடங்கிய இலங்கை தூதுக்குழுவுடனான சந்திப்பில், சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபெங்கே இருதரப்பு இராணுவ ஒத்தழைப்பிற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். மேலும் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இலங்கை சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமும் சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஸ்தாபக தலைவருமான மேஜர் ஜெனரல் ( ஓய்வு) விஜித ரவிபிரிய ஆகியோரின் அழைப்பை ஏற்று குறுத்த சங்கத்தின் இணையத் தளத்தை திறந்துவைத்தார்.

சீன தூதுக்குழுவில் பல உயர் மட்ட சீன இராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் அதிகாரிகள் இருந்தனர். ஜெனரல் ஓய்வு) கமல் குணரத்ன விடைபெறுவதற்கு முன்னர் இலங்கைக்கு எப்போதும் வழங்கி வரும் ஒத்துழைப்புக்காக சீன பாதுகாப்பு அமைச்சருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.