Header

Sri Lanka Army

Defender of the Nation

28th April 2021 06:16:48 Hours

நிபுணர்கள் அவசர நுட்பங்கள் மற்றும் அவசரகால திட்டங்கள் பற்றிய ஆராய்வு

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் இன்று பிற்பகல் (27) சுகாதார நிபுணர்கள், மருத்துவ நிர்வாகிகள், தொற்றுநோயியல் நிபுணர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளினால் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட்-19 இன் மூன்றாம் அலையின் அதிகரிப்பு போக்கினை ஆழமாக ஆராய்ந்தனர். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அதிகமான கொவிட் -19 தொற்றாளர்கள் கண்டறிந்ததை அடுத்து அவசரகால திட்டங்கள் மற்றும் எதிர்கால நுட்பங்கள் குறித்து ஆராயப்பட்டது.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமையில் பணிக்குழு நிபுணர்களின் சிறப்பு கூட்டம் நாட்டின் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது எந்தவொரு அவசர காலத்திலும் வைத்தியசாலைகள், கட்டில்கள், மருத்துவ உபகரணங்கள், மனிதவளம், மருத்துவ பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கிடைக்கும் தன்மை, வைரஸின் மாறுபாடுகள், நடவடிக்கைகள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பரம்பல் போன்றவை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் அவசரத் தேவைகளின் போது மாற்று இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் சேவைகளை எந்தவிதமான குறைபாடுகளும் தடங்கல்களும் இன்றி தொடர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தப்பட்டது. அந்த நிபுணர்கள் செயல்பாட்டு மட்டத்தில் உள்ள தடுப்பூசி மருத்துவ அம்சங்கள் தொடர்பான தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர், மேலும் நமது வரலாற்றின் இந்த முக்கியமான சந்தர்பத்தை கூட்டாக ஒப்புக்கொண்டனர்.

தேசிய தொற்று நோயியல் நிறுவன வைத்தியர் நிபுணர் ஆனந்த விஜவிக்ரம, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் பேராசிரியர் மனோஜ் வீரசிங்க, மருத்துவ தொழில்நுட்ப பணிப்பாளரும் கொவிட் -19 கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான அமைச்சின் ஒருங்கிணைப்பாளருமான வைத்தியர் எம். ஹம்தானி, ஹோமகம ஆதார வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் எரங்க நாரங்கொட, இலங்கை தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் உபூல் திசாநாயக்க, தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர, பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் மகேந்திர அர்னால்ட், கீளி பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி மருத்துவப் பீடத்தின் பேராசிரியர் அதுல சுமதிபால மற்றும் சில நிபுணர்கள் கூட்டத்தில் பங்குக் கொண்டனர்.

கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் சந்தன அரங்கல்ல, இராணுவ தலைமையகத்தின் ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மற்றும் கர்ணல் டாக்டர் சவீன் செமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.