Header

Sri Lanka Army

Defender of the Nation

28th April 2021 11:28:58 Hours

பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகள் சீன பாதுகாப்பு அமைச்சரை வரவேற்றனர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்ன மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் வைஸ் மார்ஷல் பிரசன்ன பயோ ஆகியோர் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த சீன அரசவை உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வெய் ஃபெங்கே அவர்களை செவ்வாய்க்கிழமை (27) மாலை வரவேற்றனர்.

இலங்கைக்கு குறுகிய கால விஜயம் மேற்கொண்டுள்ள ஜெனரல் ஃபெங் மற்றும் அவருடனான தூதுக்குழு அதிமேன்மை தாங்கி ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தும். வருகை தந்துள்ள சீனக் குழு சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் ‘ஏர் பப்பில்’ எண்ணக்கருவுற்கு ஏற்ப அவர்களின் இருதரப்பு விவாதங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் வரவேற்றதை அடுத்து வருகை தந்த சீன பாதுகாப்பு அமைச்சரை பாரம்பரிய இலங்கை நடனக் கலைஞர் குழுவினர் விமான நிலைய விஷேட அதிதிகள் மண்டபத்திற்கு தூதுக்குழுவை அழைத்துச் சென்றனர்

இலங்கையில் உள்ள சீனத் தூதர் அதிமேதகு குய் ஜென்ஹோங், சீன தூதரக அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் விமான நிலையத்தில் கலந்து கொண்டனர்.