Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd April 2021 07:52:52 Hours

வலைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டம் இலங்கை இராணுவ மகளிர் படைக்கு

படைப்பிரிவுகளுக்கான இடையிலான உள்ளக வலைப்பந்து போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கான விருது வழங்கல் விழாவில் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று மாலை (22) கலந்துகொண்டார்.

பிரதம அதிதியினை இலங்கை இராணுவ மகளிர் படையின் படைத் தளபதியும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் இராணுவ வலைப்பந்து குழுவின் தலைவர் பிரிகேடியர் ஜானக ரத்நாயக்க ஆகியோர் வரவேற்றனர்.

மேற்படி போட்டியில் இலங்கை இராணுவ பொலிஸ் படை, இலங்கை இராணுவ பொதுச் சேவை படை, இலங்கை சமிக்ஞை படை, இலங்கை இராணுவ மகளிர் படை உள்ளிட்ட 6 படையணி வலைப்பந்து அணிகள் வருடாந்த சாம்பியன் பட்டத்துக்கா போட்டியிட்டனர்.

இதன்போது இறுதி போட்டியை கண்டுகளிப்பதற்கான இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன், இராணுவத்தின் ஏ மற்றும் பி பிரிவு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் இலங்கை இராணுவ மகளிர் படையணி ஏ பிரிவை பிரதிநிதிதுவப்படுத்தியது.

அதனையடுத்து போட்டியில் வென்றவர்களுக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் இராணுவ தளபதியால் வழங்கப்பட்டன. பின்னர் இறுதி போட்டியின் வெற்றியாளர்களுக்கான பதக்கங்கள் மற்றும் கிண்ணங்களை வழங்கி வைப்பதற்காக பிரதம விருந்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அத்தோடு சிரேஷ்ட அதிகாரிகளும் அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்கள் உரிய சுகாதார முறைமைகளை பின்பற்றி விளையாட்டு போட்டியை கண்டுகளித்தனர்.

சாம்பியஷிப்பை வென்ற சாதனையாளர்களின் பெயர் விபரம் வருமாறு.

சிறந்த சூட்டர்: சாதாரண சிப்பாய் எஸ்எம்ஏஎன் ஜயசுந்தர

சிறந்த மத்தி வீரர் : சாதாரண சிப்பாய் பீஏஏ பண்டார

சிறந்த காப்பாளர் : சாதாரண சிப்பாய் பீடிஎஸ்.சில்வா

வலைபந்து அரசி : கெப்டன் பீஎம்என் அபேவர்தன