Header

Sri Lanka Army

Defender of the Nation

11th April 2021 18:05:10 Hours

குக்குலேகங்க மோட்டார் வாகன இறுதி போட்டியில் பிரதம அதிதியாக தளபதி பங்கேற்பு

இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுச் சங்கம் மற்றும் இலங்கையின் மோட்டார் பந்தயச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட 'குகுலேகங்க ஸ்பீட் கிளைம்ப் 2021' போட்டியின் இரண்டாவது நாள் போட்டி இன்று (11) காலை இடம்பெற்றது. குக்குலேகங்கவின் மலைப்பாங்கான பகுதிகளில் முழுமையாக கார்பட் செய்யப்பட்ட புதிய பந்தய பாதையில் சுகாதார நடைமுறைகளுக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் வழமையான சாகசங்களுக்கு மாறாக ஓட்டுநர்கள் தங்களது வேறுபட்ட திறமைகளையும் வெளிப்படுத்தினர்.

அழகிய குக்குலேகங்காவில் இடம்பெற்ற முதன்முறையாக விறுவிறுப்பான மற்றும் உற்சாகமான மோட்டார் விளையாட்டு நிகழ்வின் பிரதம அதிதியாக , பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று காலை கொடியசைத்து இறுதி போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். முடிவில், மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் மற்றும் கார் பந்தயங்களில் பங்குபற்றியவர்களுக்கு பணப் பரிசுகள், கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களும் தளபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பாதை 900 மீட்டர் நீளமும், 10 மீ அகலம் , 60 பாகை சாய்வு மற்றும் 7 வலைவுகளையும் கொண்டுள்ளது, இதில் 2 கூர்மையான வளைவுகளும் உள்ளன.

120 மேற்பட்ட தரமான ஓட்டுநர்கள், 80 மோட்டர் சைக்கிள் ஓட்டுநர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் வசந்த மாதொல, பொதுப்பணி பதவி நிலை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோ, MTV/MBC வளையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு சுசார டினால், அதிகாரிகள், நிதி அனுசரனையாளர்கள் மற்றும் விளையாட்டுக்கள் மீது ஆர்வமுள்ளவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் வசந்த மாதொல அவர்களால் பிரதம விருந்தினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

'குகுலேகங்க ஸ்பீட் கிளைம்ப்'’ போட்டி நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்கள் , நிதி அனுசரனையாளர்களுடன் இணைந்து புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் ஒரு மறக்க முடியாத அனுபவமாக குக்குலேகங்க விளையாட்டு போட்டிகளை மாற்றினர்.