Header

Sri Lanka Army

Defender of the Nation

14th April 2021 00:41:25 Hours

இராணுவத் தளபதி யாழ்பாணத்திலுள்ள முப்படையினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இன்று (12) யாழ்ப்பாணத்திற்கு சென்ற பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் முப்படையினருடன் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டதுடன், அங்குள்ள பாதுகாப்பு முன்னேற்றங்களை மதிப்பீடு செய்து, கொவிட்-19 தொடர்பான சுகாதாரப் பணிகளை தனிப்பட்ட முறையில் விசாரித்தார்.

பாலாலி விமான நிலையத்தில், அவரை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்தா பெரேரா, கடற்படை மற்றும் விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

வருகை தந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் , இராணுவத் தளபதிக்கு 14 வது கஜபா படையணியின் படையினர் விமானத் தளத்தில் வைத்து இராணுவ மரியாதை வழங்கினர்.

அங்கு முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தனது உரையின் போது, படையினர் தேசிய பாதுகாப்பிற்காக மேற்கொண்ட தன்னலமற்ற அர்ப்பணிப்பை குறிப்பிட்டதுடன் அவர்கள் கொவிட் 19 தொற்றுநோயைத் தடுப்பதற்காக அர்பணித்த மற்றும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் குடிமக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட தேசிய முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

யாழ்ணத்தில் படையினரால் மேற்கொள்ளப்படும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகள் மற்றும் சிவில்-இராணுவ நலத் திட்டங்களையும் நினைவுபடுத்தினர்.

இதேபோல், ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தனது உரையில் படையினருக்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான நலன்புரி நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார்,

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி அனைத்து படையினரிடையேயும் பல்வேறு நன்மைகள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பதனையும் சுட்டிக்காட்டினார். (புகைப்படக் கதையைப் பார்க்கவும்)

தனது உரையின் முடிவில், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் அனைத்து படையினரின் சார்பாக, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளுடன் இணைந்து வருகை தந்த இராணுவத் தளபதிக்கு பாராட்டுக்கான நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, வருகை தந்த இராணுவத் தளபதி 4 வது இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியின் படையினர் பழுதுபார்த்து புதுப்பித்த கனரக வாகனங்கள், லாரிகள், டிராக்டர்கள், மிதி வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்களை யாழ் பாதுகாப்பு படைத் தலைமைகத்தின் பயன்பாட்டிற்காக வழங்கிவைத்தார்.

அன்றைய பிரதம விருந்தினரிடமிருந்து யாழ்ப்பாணத் தளபதியால் அவை அடையாளமாகப் பெறப்பட்டன.

பின்னர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதிகள் மற்றும் இராணுவத் தளபதிக்கிடையில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது, இதில் கொவிட்-19 நிலை மற்றும் முன்னெச்சரிக்கைகள், சிவில் விவகாரம் , பாதுகாப்பு விஷயங்கள் போன்றவை கலந்துரையாடப்பட்டன.

அன்றைய பிரதம விருந்தினர் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பிரிவுகள், படைப்பிரிவுகள் மற்றும் பட்டாலியன்களிடையே விநியோகிப்பதற்கான புத்தாண்டு பரிசுகளையும் வழங்கினார்.bridge media | Nike