Header

Sri Lanka Army

Defender of the Nation

07th April 2021 17:40:34 Hours

பொதுமக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்களுக்கு செயற்கை கை கால்கள் வடிவமைப்பது தொடர்பில் பயிற்சி பட்டறை

இராணுவத் தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக இராணுவ புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ், போரினால் பாதிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 64 ஆண் பெண்களுக்கான செயற்கை கால்கள் மற்றும் கைகளை பொருத்தும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவர்கள் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் போரை நிறைவுக்கு கொண்டு வருவதற்கான அதிக பங்களிப்புகளை வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் அங்கவீனவர்களாக காணப்படுபவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் பணியாற்றியவர்கள் என்பதுடன் அவர்களை அநுராதபுரம் அபிமன்சல – 1 ஆரோக்கிய நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான செயற்கை கைகள், கால்களுக்கான அளவுகள் பெறப்பட்டதுடன் ஏப்ரல் 5 – 6 திகதிகளில் மூட்டு மற்றும் பாதம் தொடர்பிலான பயிற்சி செயலமர்வு ஒன்றும் நடத்தப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு இலங்கை இராணுவத் தளபதியின் முயற்சியின் பலனாக , உடல் ஊனமுற்ற போர் வீரர்களுக்காக இராணுவத்தால் நடத்தப்படும் பல நலனோம்பு செயற்பாடுகளில் செயற்கை கால்கள் மற்றும் கைகால்களை உற்பத்தி செய்யும் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதனால் நாட்டிற்கு அந்நிய செலாவணி விரையம் நியாயமான அளவு குறைவடையும் என்பதுடன், மேற்படி செயற்கை கால்களை சிவில் பாதுகாப்பு திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன.

அதேபோல், எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிரான போரின்போது காயமடைந்தவர்கள் உட்பட உடல் ஊனமுற்ற பொதுமக்களில் மூட்டு மற்றும் கால்கள் ஆகியன தேவையுடையவர்கள் தொடர்பிலான தொழில்நுட்ப சேவைகளை இலவசமாகப் பெற்றுக் கொடுக்குமாறு இராணுவத் தளபதி அறிவுறுத்தியுள்ளார். அத்தகைய சேவைகளைப் பெற விரும்புவோர் தயவுசெய்து தொலைபேசி எண்: 011-2958077 (ராகம ரணவிரு செவன) மற்றும் 025-2225151 (அனுராதபுர அபிமன்சல -1) உள்ளிட்ட இடங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Running Sneakers | jordan Release Dates