Header

Sri Lanka Army

Defender of the Nation

07th April 2021 17:57:34 Hours

கொவிட் 19 சுகாதாரப் பணிகளுக்கு முன்னாள் பொது திறைச்சேரி தலைவரினால் தளபதிக்கு பாராட்டு

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜனாதிபதி ஆலோசகரும், இலங்கையின் முன்னாள் பொது திறைச்சேரி தலைவருமான திரு. சனத் வீரத்ன இலங்கையின் நன்கு கட்டமைக்கப்பட்ட கொவிட் -19 சுகாதாரப் பணிகள் , சிறந்த தொழில்முறை, கருணை, இராணுவத்தின் திறமை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் மரியாதை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தான் தற்போது வாழும் நாட்டில் இவ்வாறான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புகள் இருப்பதாக தான் தனிப்பட்ட ரீதியில் கருதவில்லை என அவர் தெரிவித்தார்.

இலங்கையர் என்ற ரீதியில் தான் பெருமையடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.”

கடந்த வெள்ளிக்கிழமை (1) இலங்கைக்கு வருகை தந்தப் போது தனக்கான நீர்கொழும்பு தனிமைப்படுத்தல் செயற்பாட்டின் போது இராணுவ உறுப்பினர்களின் தொழில் ரீதியான மற்றும் மரியாதையான சேவைக்கு தனது தனிப்பட்ட நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், அவரது ஹோட்டல் தனிமைப்படுத்தல் நிலையங்களின் கௌரவமான பராமரிப்புக்கள் கொவிட் 19 பரவலை தடுக்கும் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க வைக்கிறது.

ஜனாதிபதியின் தலைமையிலான அரசு மற்றும் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் அயராத அர்ப்பணிப்பு, கடின உழைப்பு என்பன இலங்கையர்களிடையே பரவுவதை தடுத்தது. அதன் விளைவுகளை வெளிநாடுகளிலும், பெருமளவான சர்வதேச சமூகத்திலும் பெற்றுக் கொள்கின்றார். இராணுவத் தளபதியாக இலங்கை இராணுவத்தை வழிநடத்துவதற்கும் கட்டளையிடுவதற்கும் அர்ப்பணித்துள்ள நிலையில், அவரது கடின உழைப்பின் முடிவுகளை ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் தனிப்பட்ட முறையில் அனுபவித்தார். எங்கள் இராணுவத்தை வழிநடத்தும் தளபதியை நான் வணங்குகிறேன், பெருமிதம் கொள்கிறேன். இங்கிருந்தும் வெளிநாட்டிலும் வாழும் எனது சகாக்களுக்கு தேசத்தின் நலனுக்காக இந்த தகவலை பரப்புவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் இராணுவ அதிகாரிகள் ஒதுக்கீடு செய்வதிலும், வரவேற்பதிலும் சமமாக கவனித்துக்கொள்வதிலும் சிறந்த நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் அனைவருக்கும் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புக்காக தனது வணக்கத்தை செலுத்துவதாகவும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். Asics footwear | Air Jordan