Header

Sri Lanka Army

Defender of the Nation

05th March 2021 18:24:35 Hours

விமானப் படை இரண்டு பிரிவுகளுக்கு வர்ண விருதுகள்

70 வருட பூர்த்தியை எட்டியுள்ள இலங்கை விமானப் படையின் 5 வது தாக்குதல் விமான பிரிவிற்கும் 6 வது போக்குவரத்து ஹெலிகொப்டர் படைக்கும் வர்ண விருது வழங்கும் விழா இன்று (5) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாய ராஜபக்‌ஷ தலைமையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த முக்கியஸ்தர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

கட்டுநாயக்க இலங்கை விமானப்படை தளத்தில் தனது 70 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிகள், வர்ண விருதுகள் வழங்கல், வரலாற்று புத்தகம் வெளியிடுதல் போன்ற நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன, விமானப் படைத் தளபதி சுதர்ஷன பதிரன, பொலிஸ் மா அதிபர் திரு சி.டி.விக்கிரமரத்ன, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த சிரேஸ்ட விமானப்படை அதிகாரிகள், முன்னாள் விமானப்படை தளபதிகள், சிரேஸ்ட விமானப்படை அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேற்படி விமானப்படை படைப் பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கி வைத்த பின்னர் கட்டுநாயக்க சி 130 முகாமின் 2 ஆவது மற்றும் 5 ஆவது படைகளை மேற்பார்வை செய்தார். அதே சந்தர்ப்பத்தில், ஏர் கொமாண்டர் சன்ன திசாநாயக்க அவர்கள் எழுதிய ‘70 ஆண்டு காற்று சக்தியின் வரலாறு ’ எனும் புத்தகத்தின் முதல் பதிப்பை ஜனாதிபதிக்கு வழங்கினார். அதனையடுத்து ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரான வரலாற்று புத்தகத்தின் பிரதியொன்றையும், சிறப்பு நினைவுச் சின்னத்தையும் அன்றைய பிரதம விருந்தினரான ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைத்தார்.

இந்த விழாவின் போது, ஆண்டு நிறைவு விழாவில் வர்ண விருது வழங்கும் பிரிவின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தும் வகையில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு விமானப் படைத்யின் நினைவு பரிசொன்றினை ஜனாதிபதி வழங்கி வைத்தார். jordan Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ