Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd March 2021 18:00:51 Hours

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியினால் புதிய பெயர் குறிகள் அறிமுகம்

இராணுவ சீருடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடன் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் முப்படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தங்களது சேவை அடையாளங்களுடன் இலகுரக உலோகத்தால் செய்யப்பட்ட புதிய தனித்துவமான பெயர் குறிகளை பயன்படுத்த வேண்டும் என விரும்பியதற்கமைவாக க்க திங்கள்கிழமை முதல் வேண்டும் என்று விரும்பினர். அதற்கமைவாக திங்கள்கிழமை (1) முதல் சேவையின் சிறு அடையாளத்தை சீருடைகளில் காட்டும்.

இன்று (3) இராணுவ தளபதி அலுவலகத்தை பிரதிநிதித்துவபடுத்தும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு புதிய பெயர் குறிகள் சீருடையில் திட்டத்தின் முன்னோடியான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் அணிவிக்கப்பட்டது. சர்வதேச இராணுவத் தரங்களுக்கு இணையாக தற்போது பயன்பாட்டில் உள்ள முதல் பெயர் மற்றும் குடும்பப் பெயர் முழுமையாக உச்சரிக்கப்படும் இராணுவ வரலாற்றின் முதன் முறையாக இவ்வகையான புதிய பெயர் குறி இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது இராணுவத்தின் அங்கீகாரத்தை மேலும் அதிகரிக்கவும் ஒப்பிடமுடியாத சேவைக்கு கூடுதல் மதிப்பைப் ஏற்படுத்தவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பெயர் குறியில் அதிகாரவாணை அற்ற அதிகாரி 1 குடும்பப்பெயருக்கு முன் முதல் எழுத்துக்களும் அதிகாரவாணை அற்ற அதிகாரி 2 மற்றும் அதற்கு கீழுள்ள நிலைகளுக்கு குடும்பப் பெயருக்குப் பின் முதலெழுத்துக்களையும் கொண்டுள்ளது.

ஆளணி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அனில் உதயகுமார வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் ஆளணி முகாமைத்துவ பணிப்பகம் மற்றும் ஆலோசணை சபையின் அங்கிகாரத்துடன் புதிய பெயர் குறிச் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வகை கலாசாரங்களை அடையாளம் காண தூண்டுதலாகவும் மற்றவர்களுக்குப் நபரின் பெயரைக் அறிந்துக் கொள்வதற்கும் சேவையை இனங்காண்பதற்கும் இலகுவாக இருக்கும். மேலும் சீருடையில் அணியும் போது திருகாணி அல்லது ஊசி வகை பெயரினை தனது விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.

தளபதியின் உத்தரவின் பேரில், 9 செ.மீ நீளமும் 2 செ.மீ அகலமும் கொண்டதும் சேவைக்கான நிறத்தினை பயன்படுத்தியும் புதிய பெயர் குறியினை அறிமுகப்படுத்த இராணுவ ஆலோசனை சபை அங்கிகாரம் அளித்தது. தற்போது இராணுவ வீரர்கள் சீருடையில் பெயர் குறிகளை அணிவார்கள், இருப்பினும் அதில் அவர்களின் குடும்ப பெயரை மட்டுமே காட்டும்.

அதன்படி பாதுகாப்புப் பதவி பிரதான கடற்படை மற்றும் விமானப் படையின் அனைத்து நிலைகளுக்கும் இந்த புதிய பெயர் குறியினை அணியத் தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

நிறைவேற்று நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, ஆளணி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர், பிரிகேடியர் அனில் உதயகுமார, தளபதி அலுவலகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த புதிய அடையாளத்தை அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். best Running shoes brand | Nike Shoes, Clothing & Accessories