Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd March 2021 08:12:58 Hours

கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் எயார்லைன்ஸ் அதிகாரிகளுடன் சந்திப்பு

ஸ்ரீ லங்கன் எயாரலைன்ஸ் கள ஊழியர்களுடனான, தனிமைப்படுத்தல் மற்றும் விமான போக்குவரத்துச் செயற்பாடுகளை வழமை போன்று முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான சந்திப்பொன்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும், கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் திங்கட்கிழமை (01) இராணுவ தலைமையகத்தில் நடைப்பெற்றது.

இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு விபுல குணதிலக, உலகளாவிய விற்பனை, விநியோக பணிப்பாளர் திமுத் தென்னகோன், மனித வள முகாமைத்துவ மற்றும் பராமரிப்புச் சேவை குழு தலைவர் திரு புத்திகா மானகே, விமான செயற்பாட்டு தலைவர் கெப்டன் பிரவீன் வெத்திமுனி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் வைத்திய அதிகாரிகள் குழுவின் வைத்தியர் அனோமி ஜயசிங்க, கொள்வனவு ஆலோசகர் (விமானம் மற்றும் உணவு) எயார் மார்ஷல் (ஓய்வு) அஜந்த சில்வா மற்றும் பிரதம தொற்று நோய் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர, பிரதி பிரதம தொற்று நோய் நிபுணரும் கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான வைத்தியர் சமிதா கினிகே, கொவிட் 19 செயற்பாட்டு மையத்தின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் ஷந்தன அரன்கல்ல ஆகியோரும் கலந்திக் கொண்டனர்.

விமான நிலையத்தில் இயல்பான செயல்பாடுகள் விரைவாக திரும்பி வருவதையும், இலங்கை ஏர்லைன்ஸைப் பயன்படுத்தும் பயணிகளிடையே சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறனையும் சேவை மாற்றங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. Sports Shoes | Autres