Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2021 09:22:15 Hours

112 பிரிகேட் படையினரால் காணாமல் போனவரின் உடல் மீட்கப்பட்டது

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல் நேற்று (26) பதுளையிலுள்ள நாரங்கல மலையின் மீது ஏறி முகாமிட்டு தங்கியிருந்த அவிசாவலையை சேர்ந்த மலையேறும் குழுவின் ஒரு இளைஞர் 700 அடி செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்திருந்த நிலையில் அவருடைய உடல் படையினரால் மீட்கப்பட்டது.

குறித்த இளைஞருடன் சென்றிருந்த குழுவினரால் அவர் காணாமல் போயிருப்பதாக 119 பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அறிவித்த பின்னர், பொலிஸார் 112 வது படைப்பிரிவின் உதவியை நாடியிருந்தனர்.

அதன்படி பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா ஆகியோரின் அறிவுரைக்கு அமைவாக 112 படையணியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.

11 வது படைப்பிரிவின் படைத தளபதி மேஜர் ஜெனரலட சாரத சமரகோண், 112 பிரிகேட்டின் தளபதி அனுர திசாநாயக்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்ததுடன், மூடுபனியாக காணப்பட்ட வேளையிலும் 700 அடி பள்ளத்தாக்கில் குன்று குழிகளுக்கு இடையில் காணாமல் போனவரின் உடலை தேடும் பணிகளை முன்னெடுத்தனர்.

இறந்த இளைஞரான 24 வயதையுடைய அக்கலங்க பெரேரா தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர் என்பதுடன் தனது மலையேறும் குழுவுடன் மலைகளில் கூடாரமிட்டு தங்கியிருக்க வேண்டாம் என்ற அறிவுரையினையும் பொருட்படுத்தாமல் மலைமீது ஏறி அங்கு முகாமிட்டு தங்கியுள்ளார்.

இந்நிலையிலேயே நேற்று (27) காலை 11.00 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த இளைஞரின் உடல் பொலிஸார் மற்றும் வைத்தியசாலை குழுவிடம் கையளிக்கப்பட்டது. bridge media | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify