Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2021 16:35:51 Hours

சமூக வலைத்தளங்களின் பிரசாரங்களை கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் நிராகரிப்பு

கொவிட் – 19 தடுப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படையினர்களை அந்த பணிகளிலிருந்து விடுவித்து, போதைப்பொருள் ஒழிப்பு, தற்கொலைத் தாக்குதல் மற்றும் ஏனைய ஆயுதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான பணிகளில் ஈடுபடுத்தியிருப்பதாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியிருந்தாரென திங்கட்கிழமை (22.02.2021) சிங்கள சமூக வலைத்தள பக்கமொன்றில்உண்மைக்கு புறம்பான செய்தி வெளியாகியிருந்தது .

அத்தோடு அந்த செய்தியில் இராணுத்தின் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக கிடைக்காமை காரணமாக சுகாதார பணியாளர்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி அரசிற்கு எதிராக திசைத்திருப்பும் நோக்கில் புனைப்பட்ட உண்மைக்கு புறம்பானதாகும்.

அதேநேரம் இவ்வாறான செய்திகளை முழுமையாக நிராகரிப்பதாகவும், இவ்வாறான எந்தவொரு அறிக்கையோ செய்தியோ வெளியிடப்படவில்லை என்றும் இவ்வாறான தவறான பிரசாரங்களால் தேசிய பணியில் ஈடிபட்டிருப்போரை பலவீனப்படுத்தும் எனவும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். buy footwear | Air Jordan