Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2021 17:17:14 Hours

புதிதாக பதவியுயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட புத்தல அதிகாரிகள் தொழில்வாண்மை விருத்தி நிலையத்தின் தளபதியாக நியமிப்பு

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தலைமையகத்தில் திங்கள்கிழமை (22), லண்டன் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு இணைப்பாளராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்டவின் பதவிக் காலத்தை பாராட்டியதோடு வைருக்கான புதிய நிலைக்கான சின்னத்தை அணிவித்தார். இலங்கை கவச வாகனப் படையின் புதிய படைத் தளபதியாகவும் புத்தல அதிகாரிகள் தொழில்வாண்மை மேம்பாட்டு நிலையத்தின் புதிய தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் சுமார் இரண்டரை ஆண்டுகள் கடமை காலத்தை நிறைவு செய்து நாடு திரும்புவதற்கு முன்பு 2021 பிப்ரவரி 4 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தையொட்டி பலருடன் ‘மேஜர் ஜெனரல்’ நிலைக்கு உயர்த்தப்பட்டார். திங்கள்கிழமை சந்திப்பின் போது, இராணுவத் தளபதி அவரது நிலை உயர்விற்கான வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டதுடன் பீரங்கிப் படையின் புதிய பகுதிகளில் பங்கை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து விசாரித்தார். பீரங்கிப் படையின் வேறுப்பட்ட அதிகாரிகள் குறித்தும் நினைவு கூர்ந்தார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்டவிடம் புத்தல அதிகாரிகள் தொழில்வாண்மை மேம்பாட்டு நிலையத்தின் தரத்தை மேலும் உயர்த்தவும் இராணுவத்தில் வளர்ந்து வரும் அதிகாரிகளின் தொழில்வாண்மையை விரிவுபடுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார், குறிப்பாக உலகமயமாக்கலின் மாற்றங்களுக்கு ஏற்ப இராணுவத்தில் முன்னேற்றங்களை கொண்டு வருவதற்கான கற்கைகளை உருவாக்கி அவரகளின் அறிவு எல்லைகளை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

நிலை உயர்வின் நினைவுச்சின்னமாக அதிகார வாளினையும் கோலினையும் வழங்கிய ஜெனரல் சவேந்திர சில்வா அதிகாரிகள் தொழில்வாண்மை மேம்பாட்டு நிலையத்தின் தளபதியாகவும் பீரங்கிப் படையின் படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டமைக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். பெறுநர் இராணுவத் தளபதியின் பாராட்டுதலுக்கும் அவரது அன்பான கருத்துக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அக்டோபர் 2018 முதல் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு இணைப்பாளராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட சில வாரங்களுக்கு முன்பு தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தார். அவர் உயர் ஸ்தானிகராலயத்தில் கடமைகளைச் செய்யும் போது புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களின் சவால்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்தார் Sportswear free shipping | Nike SB