Header

Sri Lanka Army

Defender of the Nation

15th February 2021 15:22:38 Hours

ஹர்மடான்-3 இன் கட்டம் 4 பயிற்சிகள் கந்தகாட்டில்

ஐ.நா அமைதிகாக்கும் பணிகளின் போர்கள நகர்வு குழுவின் ஹர்மடான்-3 தயார்படுத்தல் பயிற்சியானது (16) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தில் அதன் இறுதி ஒத்திகையை நிறைவு செய்வற்கு முன்னர் ஒத்துகைக்காக திங்கள்கிழமை (15) ஆம் திகதி 387 கி.மீ தூரத்தை முடித்து கந்தகாட்டை வந்து சேர்ந்தது.

12 ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்பாணம் மைலடியில் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஊடாக கண்காணிப்பு, நடைமுறை உருவகப்படுத்தப்பட்ட போர் நிலைமைகள், தந்திரோபாய பயிற்சிகள், வரைபட ஆய்வு, உருவகப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் போன்ற பயிற்சிகளுடன் இலங்கை பீரங்கியின் 15 வது ட்ரோன் படையின் ட்ரோனின் தொழில்நுட்பம் யதார்த்த சூழ்நிலைகளை கணிக்க பயன்படுத்தப்பட்டது. மாலி மற்றும் கோவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைந்த அமைதி காக்கும் நடவடிக்கையின் (MINUSMA) கள நகர்வுகளுக்கான ஒத்திகையில் 20 அதிகாரிகள் 223 சிப்பாய்கள் பங்கு பற்றுகின்றனர்

போலி எதிரியின் திறனைக் காட்டிலும் ஒரு மட்டத்தில் பங்கேற்பாளர்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தும் நோக்கில் பாதுகாப்புத் தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் மொத்தம் 457.2 கிலோ மீற்றர் மைலடி, பருத்தித்துறை, நகர் கோவில், வெத்திலகேணி, பரந்தன் விசுவமடு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நயாறு, வெலிஓயா, பதவிய, புல்மோடை, தவுல் வெவ, கோமரங்கடவல, திருக்கோணமலை, கிண்ணியா, மூதூர், சேறுநுவர மற்றும் கந்த காடு வரையிலும் 6 கவச வாகனங்கள், 6 யூனிபபல்கள், 19 நிர்வாக வாகனங்கள் 47 உடன் கட்டம் ஐந்தாக புலதிசிகம, பொலன்னறுவ மற்றும் கிரிதலே ஊடாக மினேரியாவை சென்றடையவுள்ளது.

கஜபா படையணி, இலங்கை கவச வாகன படையணி, இலங்கை பொறியாளர்கள் படை, இலங்கை சமிஞ்சைகள் படையணி, இயந்திரவியல் கலாட் படையணி, இலங்கை பொறியாளர்கள் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவை படையணி, இலங்கை இராணுவ வைத்திய படையணி, இலங்கை இராணுவ உபகரண படையணி, இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் படை, இலங்கை இராணுவ பொலீஸ் படை மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படை ஆகியவற்றின் 20 அதிகாரிகள் மற்றும் 223 சிப்பாய்களின் பங்குபற்றலில் பயிற்சி முன்னெடுக்கப்படுகின்றது.

ஹர்மட்டன் - 3 பயிற்சியின் பணிப்பாளராக 58 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்கவும் பிரதி பணிப்பாளராக 62 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல ஆகியோர் பணியாற்றுகின்றனர். buy shoes | Nike Shoes