Header

Sri Lanka Army

Defender of the Nation

16th February 2021 16:29:28 Hours

மின்னேரியாவில் 'ஹர்மட்டன் - 3 ஒத்திகை தொடர் பயிற்சி நிறைவு

ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் யுத்த கள போக்குவரத்து அணியின் கடமைகளுக்கான ஐந்து நாள் தொடர் பயிற்சி 457.20 கிலோ மீற்றர் செயன்முறைப் பயிற்சி 16ம் திகதி மின்னேரிய இராணுவ பயிற்சி பாடசாலையுடன் நிறைவிற்கு வந்தது. இது குறித்த செயன் முறையின் அனுகூலங்கள் மற்றும் குறைபாடுகளை இனங் காண்பதற்கான ஒரு பயிற்சியாகும்.

கஜபா படையணி, இலங்கை கவச வாகன படையணி, இலங்கை பொறியாளர்கள் படை, இலங்கை சமிஞ்சைகள் படையணி, இயந்திரவியல் கலாட் படையணி, இலங்கை பொறியாளர்கள் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவை படையணி, இலங்கை இராணுவ வைத்திய படையணி, இலங்கை இராணுவ உபகரண படையணி, இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் படை, இலங்கை இராணுவ பொலீஸ் படை மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படை ஆகியவற்றின் 20 அதிகாரிகள் , 223 சிப்பாய்கள் மற்றும் 47 வாகனங்கள் உடன் யதார்த்தமான நடைமுறை சூழ்நிலைகளுக்கான ஒத்திகை ஐந்துக் கட்டங்களாக யாழ்ப்பாணம் மைலடியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

ஹர்மட்டன் – 3 பயிற்சியின் பணிப்பாளரும் 58 வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க மற்றும் பிரதி பயிற்சி பணிப்பாளரும் 62வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல ஆகியோர் மற்றும் பங்கேற்ற அதிகாரிகள் மினேரிய பயிற்சி பாடசாலையில் முழு ஒத்திகையின் அனுபவங்கள் ,வெற்றி, கோட்பாட்டு மற்றும் நடைமுறை சாதக பாதகங்கள் ஆராய்ந்தனர்.

பயிற்சி ஒத்திகை கட்டம் 1 மைலாடியிலிருந்து குவேனி சந்தி வரையும் கட்டம் 2 குவேனி சந்தியிலிருந்து நாயாறு வரையும் கட்டம் 3 நாயாறு முதல் தவுல்வெவ வரையும் கட்டம் 4 தவுல்வெவவிலிருந்து கந்தக்காடு வரையும் கட்டம் 5 கந்தக்காட்டிலிருந்து மினேரிய இராணுவ பயிற்சி பாடநாலை வரையும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கண்காணிப்பு, நடைமுறை உருவகப்படுத்தப்பட்ட போர் நிலைமைகள், தந்திரோபாய பயிற்சிகள், வரைபட ஆய்வு, உருவகப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் போன்ற பயிற்சிகளுடன் இலங்கை பீரங்கியின் 15 வது ட்ரோன் படையின் ட்ரோனின் தொழில்நுட்பம் யதார்த்த சூழ்நிலைகளை கணிக்க பயன்படுத்தப்பட்டது.. மாலி மற்றும் கோவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைந்த அமைதி காக்கும் நடவடிக்கையின் (MINUSMA) கள நகர்வுகளுக்கான ஒத்திகையில் 6 கவச வாகனங்கள், 6 யூனிபபல்கள் மற்றும் 19 நிர்வாக நடவடிக்கைக்கான வாகனங்கள் 47 ஒத்திகை பயணத்தின் வெற்றிக்கு பங்களித்தன.

போலி எதிரியின் திறனைக் காட்டிலும் ஒரு மட்டத்தில் பங்கேற்பாளர்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தும் நோக்கில் பாதுகாப்புத் தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் பணியாளர்கள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. Running sports | Nike Air Max