Header

Sri Lanka Army

Defender of the Nation

13th February 2021 21:15:20 Hours

ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்கான தயார்படுத்துதல் பயிற்சிக்குழு நாயாறு பகுதியை வந்தடைந்தனர்

யாழ்ப்பாணம் மயிலடி பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுவரும் பயிற்சி குழுவினர் இரண்டாவது நாளான நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை 158 கிலோ மீட்டர் பயணித்து நாயாறு பகுதியை வந்தடைந்திருந்த நிலையில் (14) தாவுல் வெவ பகுதியை சென்றடையவுள்ளது.

ஐ.நா அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுதவதற்கான மேற்படி ஹர்மடான்-3 தயாரபடுத்தல் பயிற்சிகள் மாலி மற்றும்கோவா ஆகிய பகுதிகளில் ஏற்படும் சவால்கள் தொடர்பான பயிற்சிகள் தொடர்பிலான அனுபவத்தை பெற்றுக்கொள்வதுடன், இந்த கள பயிற்சிகள் கஜபா படையணியின் தலைமையில் இலங்கை கவசப் படை, சமிக்ஞை படையணி, இயந்திரவியல் படை,பொறியியல் சேவை படை, இராணுவ பொதுச்சேவை படையணி, இராணுவ வைத்தியப்படை, யுத்த உபகரணப் படை, மின்னியல் பட மற்றும் பொறியியல் படை, இராணுவ பொலிஸ் படையணி, இராணுவ பொதுச் சேவைப் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி 20 சிப்பாய்கள், ஏனைய பதவி நிலையினர் 223 பேரும் கலந்துக்கொண்டனர்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவ தலைமையகத்தின், பணி நிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் ஹர்மடான் -3 கள பயிற்சிகள் யாழ்ப்பாணத்திலிருந்து மின்னேரியா வரையிலான 457.2 கிலோமீற்றர் தூரத்துக்கு முன்னெடுக்கப்பட உள்ளது.

அதன்படி ஹர்மடான் களப் பயிற்சிக்கான வாகனங்கள், மயிலடி, பருத்தித்துறை, நகர்கோவில்,வெத்தலகேணி, பரந்தன் விஸ்வமடு, புதுகுடியிருப்பு, முல்லைத்தீவு, நாயாறு,வெலிஓயா,பதவிய, புல்மோட்டை, தாவல் குளம்,கோமரன்கடவல, திருகோணமலை, கிண்ணியா, மூதுர் சேறுநுவர, கந்தகாடு ,புலதிசிகம,பொலன்னறுவை,கிரிதளை ஊடாக 16 ஆம் திகதி மின்னேரியா காலாட் படை பயிற்சிப் மையத்தை சென்றயும்.

கவச வாகனங்கள் 06, யுனி பபள் ரக வாகனங்கள் 06, பொருள்கள் விநியோகத்துக்கான 19 வாகனங்கள் உள்ளட்டங்களாக 47 இராணுவ வாகனங்கள் இந்த களப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. Sports brands | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today