Header

Sri Lanka Army

Defender of the Nation

29th January 2021 18:48:46 Hours

1000 தடுப்பூசிகளை நிறைவு செய்துகொண்ட இராணுவம் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை 4 நாட்களில் முடிக்க எதிர்பார்க்கிறது

இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைத்த 'அஸ்ட்ராஜெனெகா ,கோவிஷீல்ட்' எனப்படும் கொவிட் – 19 தடுப்பூசிகளை கொவிட் - 19 தடுப்புக்காக முன்நின்று செயற்படும் இராணுவ வீரர்களுக்கு ஏற்றும் பணிகள் நேற்று (29) ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் நேற்றைய தினம் நாராஹேன்பிட்டி, பனாகொடையிலுள்ள வைத்தியசாலைகளில் 1000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் கலந்துகொண்டார்.

சனிக்கிழமை (30)மேலும் 7500 தடுப்பூசிகள் அனுராதபுரம், மின்னேரிய, திருகோணமலை, மன்னார். வவுனியா, பலாலி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, தியதலாவ மற்றும் அம்பாறை ஆகிய இடங்களிலுள்ள இராணுவ வைத்தியசாலைகளில் தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை, பூச உள்ளிட்ட பகுதிகளில அமைந்துள்ள 12 மற்றும் 61 வது படைப்பிரிவிகளில் சேவையாற்றுகின்ற படையினருக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இன்று 29 ஆம் திகதியிலிருந்து நான்கு நாட்களுக்குள் இராணுவத்திற்கு 31,000 தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடுப்பூசி ஏற்றும் நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இராணுவ நோய்த் தடுப்பு மற்றும், மனநல சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் கேணல் சவீன் செமகேக்கு முதல் ஊசி ஏற்றப்பட்டதுடன், அதனையடுத்து முன்னுரிமை பெயர் பட்டியலின் பிரகாரம் இரண்டு இராணுவ வீர்ர்களுக்கு ஊசி ஏற்றப்பட்டது. jordan release date | Women's Sneakers