Header

Sri Lanka Army

Defender of the Nation

27th January 2021 08:39:44 Hours

‘கஞ்சா செடிகள்’ படையினரால் அழிப்பு

சியம்பலாண்டுவ பகுதியில் கஞ்சா உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு பகுதியை 121 வது பிரிகேட்டின் 18 ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் செவ்வாய்கிழமை 26 ஆம் திகதி சுற்றி வளைக்கப்பட்டு அங்கு நாட்டி வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.

சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுப்பகுதிக்குள் சட்ட விரோதமாக பயிரிடப்பட்டிருந்த குறித்த கஞ்சாவின் அன்னளவான பெறுமதி ரூபா 10 மில்லியனாகும். குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸாரின் மேற்பார்வையுடன் கஞ்சா செய்கையை படையினர் அழித்தனர்.

தற்போது இது தொடர்பான விசாரணைகளை தம்மான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

12 ஆவது பிரிவின் படைத் தளபதியினால் விடுக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் 121 வது பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைவாக அப்படைப்பிரிவின் சிப்பாய்கள் இந்த சட்ட விரோத கஞ்சா செய்கையை அழித்தனர்.

121 வது பிரிகேட் தளபதியின் தீவிர கண்காணிப்பின் கீழ் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. trace affiliate link | UK Trainer News & Releases