Header

Sri Lanka Army

Defender of the Nation

27th January 2021 07:39:44 Hours

கொவிட் -19 தடுப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆராய்ந்தனர்

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் கொவிட் -19 தடுப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் , கொவிட் -19 தடுப்புச் செயற்பாடுகள், சுகாதார வழிக்காட்டல்கள் , தனிமைப்படுத்தல் மையங்களை நடத்திச்செல்லுதல், தடுப்பூசி விநியோகம், பற்றாக்குறைகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியமை மற்றும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் தலைமையில் ஆராயப்பட்டன.

அதனையடுத்து, அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அனைத்து மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பொலன்னறுவை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் கொவிட் – 19 தடுப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றம் பற்றியும், இந்தச்செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்க வேண்டிசெயற்பாடுகள் பற்றியும் தனித்தனியாக தெளிவுபடுத்தல்களை வழங்கினர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, 24 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திலக் வீரகோண், 22 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, 23 வது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் நலீன் கொஸ்வத்த, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள பிரிகேட் படைப்பிரிவுகளின் தளபதிகள், கிழக்கு மாகாண கடற்படை மற்றும் விமானப் படை தலைமை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட கிழக்கு மாகாணத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். Authentic Sneakers | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!