Header

Sri Lanka Army

Defender of the Nation

26th January 2021 11:49:02 Hours

மேஜர் ஜெனரல் சிந்தக கமகேவின் சேவைக்கு இராணுவ தளபதியின் பாராட்டு

இராணுவத்தின் 34 வருட முன்மாதிரியான சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுச் செல்லும் இலங்கை பொறியியல் படையணியில் சேவையாற்றிய மிகச் சிறந்த அதிகாரிகளில் ஒருவருமான கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகேவுக்கு ஓய்வுப் பெற்றுச் செல்வதையிட்டு அவரை நேற்று (25) திங்கட்கிழமை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது அலுவலகத்துக்கு அழைப்பித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

இராணுவ தளபதி ஜெனரால் ஷவேந்திர சில்வா , மேஜர் ஜெனரல் சிந்தக கமகேவுடனான உரையாடலின் போது அவருடைய சேவைகளை நினைவுகூர்ந்ததுடன் இராணுவ பயிற்சி கட்டளையில் அவர் ஆற்றிய சேவைகள், தொழில் திறன்களை அர்பணிப்புச் செய்தமை உள்ளிட்ட விடயங்களையும் நினைவுகூர்ந்ததோடு அதற்காக நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

அதனையடுத்து ஓய்வுப் பெற்றுச் செல்லும் தளபதி, இராணுவ தளபதியின் அறிவுரைகள் மற்றும் பாராட்டுகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்ட பின்னர் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவினால் அவருடைய சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது. latest jordans | nike air jordan lebron 11 blue eyes black people