Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2021 11:30:04 Hours

கிளிநொச்சியில் குளக்கட்டின் பாரிய வெடிப்பு படையினரால் கூட்டாக தவிர்ப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படையின் தலைமையகத்தின் 57 ஆவது படைப்பிரிவின் 571 வது பிரிகேட்டின் 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் மற்றும் 12 வது சிங்கப் படையினர் கூட்டாக இணைந்து அதிக மழை வீழ்ச்சி காரணமாக கிளிநொச்சி செல்வநகரில் உள்ள கண்டன்குளத்தின் அணைக்கட்டில் ஏற்படவிருந்த பாரிய வெடிப்பை தவிர்த்தனர்.

இருள் சூழ்ந்த மாலை நேரத்தையும் பொருட்படுத்தாது வெடிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு மணல் மூட்டைகளை இட்டு தடுப்புகளை ஏற்படுத்தினர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட மற்றும் 57 வது படைப்பிரிவு தளபதி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கிராமவாசிகளின் ஆதரவுடன் நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்ட திட்டத்தை 571 ஆவது பிரிகேட்யினால் கண்காணிக்கப்பட்டது.

குளக்கட்டில் ஏற்பட்ட வெடிப்பை அறிந்து அவ்விடத்துக்கு சென்ற மாவட்ட செயலாளரும் மற்றும் அரச அதிகாரிகளும் அவ்விடத்துக்குச் சென்று தடுப்பு அமைக்கும் பணிகளை கண்காணித்தனர். Buy Sneakers | Sneakers Nike Shoes