Header

Sri Lanka Army

Defender of the Nation

20th January 2021 16:53:03 Hours

கொவிட் தடுப்பு தலைவர் தனியார் வைத்தியசாலைகளிடம் அங்கீகரிக்கப்பட்ட கடுமையான ஒழுங்கு முறை மற்றும் பொறிமுறையை எதிர்பார்ப்பு

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் விஷேட மருத்துவ நிபுணரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமையில் இன்று (20) காலை தனியார் துறையின் உயர் தொழில்நுட்ப ஆய்வு கூட முகாமையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளை நடத்துவதற்கான பொதுவான ஒழுங்குமுறை பொறிமுறையை அமல்படுத்துதல், இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஆடைத் தொழில் ஊழியர்கள், வெளிநாடுகளுக்குச் செல்வோர், அந்தந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு இதுபோன்ற நடைமுறைகளின் 100% நம்பகத்தன்மையை ஒழுங்குபடுத்துவதற்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி அவற்றை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

"ஆன்டிஜென் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு வருபவர்களை அவர்களின் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு காத்திருக்கும் இடத்தில் தடுத்து வைப்பது தனியார் துறையின் கடமையாகும், ஆனால் அவ்வாறு நடப்பதில்லை என்றும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டும் சந்தர்பத்தில் முறையானவை நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதுபோன்ற சந்தர்பங்களில் குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுவதில்லை புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளன. சில தனியார் வைத்தியசாலைகள் அமைச்சிடமிருந்து எந்த அனுமதியையும் பெறாத பிராந்திய மற்றும் மினி ஆய்வு கூங்களிலும் ஆன்டிஜென் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்கின்றன இவ்வாறான நடவடிக்கைகள் தொற்று பரவலுக்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இவற்றில் தொற்று உறுதியாபவர்கள் வைத்தியசாலைகளில் மட்டுப்படுத்தாமல் வைரஸ் தொற்றக் கூடிய பல்வேறு இடங்களில் ஒளிந்து கொள்கின்றன, என ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.

நீங்கள் அனைவரும் ஆன்டிஜென் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு வெவ்வேறு தொகைகளை வசூலிக்கிறீர்கள் என்றும் புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ள தொழில்நுட்ப ரீதியாக பொருத்தப்பட்ட 30 ஆய்வு கூடங்கள் மட்டுமே சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் சில பாதிக்கப்பட்ட தரப்பினரால் இதுபோன்ற சோதனைகளின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து கவலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதோடு சில நேரங்களில் முரண்பாடான முடிவுகள் கிடைத்துள்ளமை பற்றியும் ஆராயப்பட்டது. அதேநேரம் நேற்று மட்டும், 18,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள போதும், தனியார் துறை கட்டணம், அதாவது முதலீட்டுச் சபை நிறுவன ஊழியர்களுக்கு ரூபாய் 6750 என்ற கட்டண அறவீடு மாறாமல் உள்ளது. இதுபோன்ற சோதனைகளுக்கான தற்போதைய விலை வரம்புகளை மக்களின் நலனுக்காக மேலும் குறைக்க முடிந்தால் அது மிகவும் நல்லது என்று சுட்டிக்காட்டிய ஜெனரல் ஷவேந்திர சில்வா வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதேநேரம் உக்ரேனிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரிச்சார்த்த திட்டமாக தனியார் துறை மருத்துவமனைகளுக்கு பி.சி.ஆர் சோதனைகளை நடத்த சுகாதார அதிகாரிகள் அனுமதி அளித்ததாகவும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார்.

வைத்தியர் அசேல குணவர்தன அந்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இந்த நடைமுறைக்கான வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தவறான நடைமுறைகளை நாடாமல் சோதனை முறையின் நம்பகத்தன்மையை மிக உயர்ந்த மட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் சுகாதார அமைச்சு ,சுகாதார திணைக்களம் மற்றும் அரச வைத்தியசாலை உயர் மட்ட அதிகாரிகள், பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராஜகிரியகொவிட் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் 10-12 ஆய்வு கூட அதிகாரிகள், தனியார் வைத்தியசாலை நிர்வாகிகள் குழுவும் கலந்து கொண்டனர். Authentic Nike Sneakers | Patike