Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2021 20:21:24 Hours

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக தொழில் வல்லுநர்கள் ஆராய்வு

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் இன்று (17) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத தொழில் வல்லுநர்களின் பிரதிநிதி ஒன்றுகூடலில் நோய்பரவலை மேலும் கட்டுப்படுத்துவதற்கான மூலோபாய அணுகுமுறைகள் மற்றும் அதனை வழமைக்கு நிலைக்குத் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

உடல்நலம், சுற்றுலா, போக்குவரத்து, கல்வி, வணிகம் போன்ற துறைகளின் வல்லுநர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில், கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கலந்தரையாடலில் தனிமைப்படுத்துதல், அதிகமான வெளிநாட்டினரின் வருகை, விமான நிலைய சேவைகளை மீண்டும் ஆரம்பித்தல், சுற்றுலா வருகைகள், என்டிஜன் சோதனைகள் மற்றும் பி.சி.ஆர் சோதனைகள், பிரதேசங்களை தனிமைப்படுத்துதல், கொவிட்நோயளர்களை அனுமதிப்பது போன்ற நடைமுறைகள் மற்றும் உபாயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் இந்த கலந்துரையாடளில் உபாயங்ளை பின்பற்றும்போது ஏற்படுகின்ற தவறுகள் பற்றியும் சவால்கள் சமாளிப்பதற்கும் நடைமுறைகளை மேம்படுத்துவதற்குமான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்துடன், அதற்கான வழிமுறைகள்மேற்படி கூட்டத்தில் பங்கேற்ற நிபுணர்களிடம் கேட்டறியப்பட்டன. Running sport media | Air Jordan