Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2020 15:40:32 Hours

சேதமடைந்த காகித புத்தரின் சிலையை அகற்றல் குறித்து சமூக ஊடக அறிக்கைகளுக்கு இராணுவம் வருத்தம்

குருவிட்ட கெமுனு ஹேவா படை தலைமையக பட்டாலியனுக்குள் காகிதக் கூழால் செய்யப்பட்ட புத்தர் சிலையின் மிகப் பழைய சிலை ஒன்றை அப்புறப்படுத்துவதினை சில சமூக ஊடக பிரிவுகளில் காழ்ப்புணர்ச்சி. நோக்கில் தவறான விளக்கம் அளிக்கப்படுவதை கவனத்தில் கொண்டு வந்துள்ளது.

சுமார் 10 - 15 ஆண்டுகளுக்கு முன்பு போசன் அலங்காரங்களின் போது பயன்படுத்தப்பட்ட சிலை கறையான கடித்து பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சிதைவடைந்தமையால் அவ்விடத்தை சுத்தம் செய்வதற்கு முன்பு முகாமுக்குள் ஒரு பின்புற குடிசையில் கட்டளை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் வைக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் போரின்போது ஏற்பட்ட மனநல கோளாறுகள் காரணமாக அந்த முகாமில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ ரீதியாக வகைப்படுத்தப்பட்ட வீரர்களில் ஒருவர், இன்று (19) காலை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முந்தைய அறிவுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல் தீவைத்துள்ளார்.

புத்தரின் இந்த சேதமடைந்த சிலையினை அப்பகுதியில் பௌத்த துறவி ஆலோசணைக்கு அமைவாக அகற்ற இருந்து போதும். சிலையினை எரிப்பதற்கு முகாம் கட்டளை அதிகாரி எத்தகைய அறிவுறுத்தலும் கொடுக்கவில்லை. இந்த சம்பவத்தை தவறான சிலர் பரப்பி வருகின்றனர். இது முற்றாக நிராகரிக்கப்படுகின்றது. (முடிவு)best shoes | balerínky