Header

Sri Lanka Army

Defender of the Nation

17th December 2020 21:08:20 Hours

யாழ் பாதுகாப்பு படையினரின் தேசிய கட்டுமான மற்றும் கொவிட்-19 கட்டுப்பாட்டு பணிகளை பாராட்டிய இராணுவத் தளபதி

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புது வருட காலத்தை முன்னிட்டு, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வியாழக்கிழமை 17 ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார். அங்கு அவரை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் வரவேற்றார். படைத் தமையக நுழைவாயிலில் வைத்து அவருக்கு 14 வது கஜபா படையணியின் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதையளிக்கப்பட்டது.

அங்கு விஜயத்தை மேற்கொண்ட அன்றைய பிரதம அதியவர்கள் படைத் தலைமையக நுழைவாயிலுக்கருகாமையில் மா மரக்கன்றினை நட்டார். இராணுவத் தளபதியின்' துரு மிதுரு - நவ ரட்டக்' திட்டத்தினை விரிவுபடுத்தும் முகமாக ஒரே நேரத்தில், படையினர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இணைந்துள்ள பாலாலி இராணுவ பாசறை வளாகத்தில் உள்ள 'செனுர உயன'வில் 400 மா மரக்கன்றுகளை நட்டனர்.

பின்னர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக சினிமா மண்டபத்தில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள அனைத்து படைப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 150 பிரதிநிதி படையினர் மத்தியில் உரையாற்றினார்.அவரது உரையில் கொவிட்-19 தொற்றுநோய்கு எதிராக படையினரால் மேற்கொண்ட தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் அவர்களது முயற்சிகளையும் அவர் பாராட்டினார். ‘புரேவி’ சூறாவளியின் போது படையினரால் முன்னெடுக்கப்பட்ட நலன்புரிதிட்டங்கள் மற்றும் உடனடி பேரழிவு நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் அவர் தனது பாராட்டை தெரிவித்தார்.

படையினர் மத்தியிலான உரையின் பின்னர், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி பிரதம அதிதியின் விஜயத்தின் அடையாளமாக அவருக்கு நினைவுச் சின்னத்தினை வழங்கினார்.

51,52 மற்றும் 55 வது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படைத் தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பதவி நிலை மற்றும் பிரிகேடியர் நிருவாகம் மற்றும் விடுதி, பிரிகேட் படைப் பிரிவுத் தளபதிகள், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.Nike sneakers | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf