Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2020 09:32:08 Hours

அனைத்து ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் அல்லது என்டிங்ஜன் பரிசோதணை

அடிப்படை சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும கொவிட் -19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ (டாக்டர்) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று (15) பிற்பகல் செயற்க்குழு உறுப்பினர்கள் மற்றும் நிபுணநர்களின் பங்குபற்றலில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கொவிட் 19 பரவலைத் தடுக்கும் செயற்குழுத் தலைவர் வைரஸ் தடுப்பதற்கும் நாட்டின் சமூக-பொருளாதார நடவடிக்கைகள் செயல்படுவதற்குமான சமநிலையை ஏற்படுத்துவதற்கு அரசின் தனிமைப்படுத்தல் மூலோபாயத்தைப் பற்றி பணிக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார். மேலும் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மாடி குடியிருப்புகளின் தனிமைப்படுத்தல் முன்னேற்றம் குறித்தும் விளக்கினார். தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 தொடர்மாடி குடியிருப்புகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவருக்கும் விரைவான என்டிஜன் பரிசோதனைகள் மற்றும் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படுகின்றன. பரிசோதணைகளின் போது அந்த குடும்ப உறுப்பினருக்கு தொற்று உறுதிச்செய்யப்பட்டால், அக்குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்படும்.. இந்த செயல்முறை நேற்று வரை தனிமைப்படுத்தப்பட்ட 10 தொடர்மாடி குடியிருப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் இரண்டு தொடர்மாடி குடியிருப்புகளில் இன்று இந்த செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இராணுவத் தளபதியும் தற்போதுள்ள தனிமைப்படுத்தும் மூலோபாயம் சமூகத்தில் மிகச்சிறிய அலகுகளை தனிமைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகக் கூறினார். கொழும்பு மாவட்டத்தைத் தவிர ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவது கிராமங்கள் அல்லது கிராமத்தின் பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில், குறிப்பாக மாநகர பகுதியில் கொவிட் 19 இன் பரவலின் தன்மையை கருத்தில் கொண்டு மேலும் 9 பொலிஸ் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை மதலீட்டுச் சபை நிறுவனங்களில் தினசரி அடிப்படையில் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் ரேபிட் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுகாதார அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாளைக்கு 1% ஊழியர்கள் அல்லது வாரத்திற்கு 5% என செய்யதல் வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடற்படையின் மேற்பார்வையின் கீழ் ஐந்து தனியார் வைத்தியசாலைகள் இந்த பரிசோதனைகளை நடத்துகின்றன.

பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஏராளமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தனியார் வைத்தியசாலைகள் அல்லது சொகுசு ஹோட்டலிகளை இடைநிலை பராமரிப்பு நிலையமாக செயல்படுத்துவதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு குறித்த நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வைத்தியசாலைகள் உரிய தேவைகளை பூர்த்தி செய்துள்ள மூன்று திட்டங்களை இங்கு சமர்பித்துள்ளன.

முந்தைய நாட்களின் புள்ளிவிபரங்கள் குறித்து பணிப்பாளர் நாயகம் விளக்கினார். மேலும் வைத்திய நிபுணர்களுடன் தனிமைப்படுத்தல் முறைமை மதிப்பீட்டிற்குப் பிறகு நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் செயல்முறையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வெளிநாட்டிலிருந்து மேலும் 65,000 இலங்கையர்கள் நாட்டிற்கு திரும்பி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன் அவர்களுக்கு கூடுமான வசதிகள் பெற்றுக் கொடுத்தல் தொடர்பாக ஆராயப்பட்டது. jordan release date | Sneakers Nike Shoes