Header

Sri Lanka Army

Defender of the Nation

09th December 2020 11:16:29 Hours

கைதிகளுக்கான சிறப்பு கொவிட் -19 சிகிச்சை மையங்கள் நிறுவுதல் மற்றும் தொடர் மாடி குடியிருப்புக்களை தனிமைப்படுத்துதல் தொடர்பாக ஆராய்வு

முதன்மை சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் -19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளை கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் வைத்திய நிபுணரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோரின் இணைத் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்களின் பங்குப்பற்றலில் இன்று பிற்பகல் (8) செயற் குழுவின் ஒர் அமர்வு இடம்பெற்றது.

சிறைகளில் இனங்காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உத்தரவுகளின்படி, இராணுவத்தின் பாதுகாப்புடன் கூடிய பல சிறப்பு சிகிச்சை மையங்கள் யாழ்ப்பாணம், கந்தக்காடு மற்றும் கல்லேல்ல பகுதிகளில் அமைக்கப்படும் கொவிட் செயலணி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூட்டத்தில் தெரிவித்தார்.

நீண்டகால தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தொடர் மாடிக் குடியிருப்புக்களை விடுவிப்பதற்கான புதிய மூலோபாயம் மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது அங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களின் அனைவருக்கும் பி.சி.ஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகள் மூலம் கூடிய வரைவில் அவற்றை விடுவிப்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஒக்டோபர் மாதம் 21 ம் திகதிக்கு பின்னர் கொழும்பு மாநகர எல்லைப் பகுதியில் கொவிட் தொற்று பரவுவது முந்தைய பதிவுகளுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் குறைந்துவிட்டது, மேலும் அதிக ஆபத்தான வலயங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 க்கு உள்நாட்டு மருந்துகள் குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்திய செயலணி தலைவர், சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு மூலம் சுதேச மருத்துவத் துறையின் மருத்துக்கள் பரிசோதிக்கப்பட்டு சரிபார்க்கப்படும் என்று கூறினார். 500-600 வெளிநாட்டவர்களை தினசரி வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு அழைத்து வருதல் ,பி.சி.ஆர் சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் செயல்முறைகள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் (8) இலங்கையின் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் ரசியா பெண்ட்சி ஒரு தொகுதி தொழில்நுட்பம் , மருத்துவ , உதவி உபகரணங்கள் மற்றும் உபகரணங்களை பரிசளித்தார், இது வைரஸ் பரவலின் கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அது தொடர்பான தேவைகள் முதன்மை சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் கட்டுப்பாடு மற்றும் கொவிட 19 பரவலை தடுக்கும் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளை கொவிட் செயலணி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர அசேல குணவர்தன மற்றும் வைத்திய நிபுணர் டாக்டர் அமல் ஹர்ஷா டி சில்வா ஆகியோரிடம் கையளித்தார்.

வழங்கப்பட்ட நன்கொடையில் 103 மடிக்கணினிகள் பைகள் (எச்பி 17), 100 பென்கள் டிரைவ்கள் (32 ஜிபி), திரைகளுடன் கூடிய 11 மல்டி மீடியா புரஜெக்டர்கள், 60 ஹெச்பி லேசர் பிரிண்டர்கள், 20 போர்ட்டபிள் கமர்ஷியல் நெபுலைசர்கள், 5 இன்ஃப்யூஷன் பம்புகள் இசட்என்பி-எக்ஸ்.கே, பிளேடுகளுடன் 4 லாரிஞ்சியோஸ்கோப், 20 அம்பு பைகள் (வயது வந்தோர்), 10 சிரிஞ்ச் பம்புகள், 1 டிஃபிபிரிலேட்டர் மானிட்டர் (பிலிப்ஸ் பிலிப்ஸ்.டி.எஃப்.எம் 100), 85 டிஜிட்டல் நாடி துடிப்பு அறியும் கருவிகள், 1 ஆட்டோகிளேவ் மெஷின் - மினி, 4 கார்டியோ மானிட்டர்கள் (மல்டி பாரா மானிட்டர்), 2 தொகுதி சிகிச்சை அளிக்கும் கருவிகள் (காவ் கண்டறியும் கருவிகள்) மற்றும் 75 டிஜிட்டல் தெர்மோமீட்டர்கள் (சாஃப்டா டிஜிட்டல் தெர்மோமீட்டர்) காணப்பட்டன. jordan Sneakers | Gifts for Runners