Header

Sri Lanka Army

Defender of the Nation

07th December 2020 07:00:19 Hours

தளபதியின் முயற்சியில் வெல்லவாவில் நிறுவப்பட்ட செயற்கை உறுப்புகளை உருவாக்கும் பிராந்திய சேவை பட்டறை

செயற்கை உறுப்புகளை உருவாக்கும் பட்டறையினை இராகம ரணவீரு செவனவில் சமீபத்தில் திறந்து வைத்த போது இராணுவத் தளபதியால் புனர்வாழ்வு பணிப்பகத்திற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மொனராகலை, அம்பாறை, பதுள்ளை மற்றும் ஹம்பாந்தோடை மாவட்டங்களில் வசிக்கும் உடல் ஊனமுற்ற போர் வீரர்களுக்கு மேலும் வசதியாக செயற்கை கால்களை உற்பத்தி செய்யும் புதிய சேவை பட்டறை வெல்லவயாவை தளமாகக் கொண்டு 5 வது கெமுனு ஹேவா முகாமில் நிறுவப்பட்டது.

பிராந்திய மட்டத்தில் செயற்கை கால்களை உருவாக்கல் அல்லது பழுதுபார்ப்பதற்காக இத்தகைய சேவை மையங்களை நிறுவுவது சிரமத்தை வெகுவாகக் குறைக்கும், இது தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மாற்றுதிறனாளி போர் வீரர்களுக்கும் இராணுவ முகாமுக்குள் இருக்கும் வீரர்களுக்கும் அந்த தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்ய நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் இது அவர்களுக்கு பெரும் உதவியாகிறது.

5வது கெமுனு ஹேவா முகாமில் உள்ள இந்த புதிய பட்டறையின் ஊடாக மொனராகலை, அம்பாறை, பதுள்ளை மற்றும் ஹம்பாந்தோடை மாவட்டங்களில் நிரந்தரமாக வசிக்கும் 1013 மாற்றுத் திறனாளி போர் வீரர்களுக்கு பயனளிக்கும்.

ராகம ரணவீரு செவன ஆரோக்கிய நிலையத்தின் தளபதி பிரிகேடியர் துஷன் சேனாரத்ன மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் அஜித் சேனாதீர, கெமுனு ஹேவா படையின் 2 ம் கட்டளை அதிகாரி, புதிய சேவை பட்டறையின் அதிகாரி கட்டளை மற்றும் அப்பகுதியில் உள்ள சில மாற்றுத் திறனாளி போர் வீரர்கள் தொடக்க விழாவில் கலந்துக்கொண்டனர்.Authentic Nike Sneakers | Air Jordan