Header

Sri Lanka Army

Defender of the Nation

07th December 2020 08:47:19 Hours

கிளிநொச்சி படையினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான பழுது மற்றும் நிவாரணப் பணிகளில்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடவின் வழிகாட்டுதல்களில் கடந்த சில நாட்களாக (டிசம்பர் 3-7) பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் படையினர் சூறாவளி வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துதல் , மீட்டல் பதைகளின் தடைகளை அகற்றுதல், அவசரகால பழுதுகளை திருத்தல் மற்றும் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவை வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

57 மற்றும் 66வது படைப்பிரிவுகளில் சேவை செய்யும் படையினர் 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யபா மற்றும் 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு ஆகியோரின் நெருங்கிய ஒத்துழைப்புடன் அவசர உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

57 வது படைப்பிரிவின் இலங்கை சிங்க படையின் படையினர் பெரியகுளம் மற்றும் கட்டகாடு பகுதிகளில் வீடுகளைச் சுற்றி தேங்கியுள்ள வெள்ள நீர் ஞாயிற்றுக்கிழமை (6) மாலை வரை குறையாத காரணமாக அங்குள்ள குடும்பங்களுக்கு கிராம சேவையாளர் மற்றும் அரச அதிகாரிகளுடன் இணைந்து சமைத்த உணவு மற்றும் உலர் உணவு பொதிகளை வழங்கினர். அதேவேளை விசுவமடு பகுதியில் வீட்டு கூரை மற்றும் வளவில் விழுந்த மரங்களை அகற்றி அம்மக்களுக்கு படையினர் உதவினர்.

இதற்கிடையில் 572 பிரிகேட்டின் 14 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் படையினர் புன்னனிரவி-திரிமந்தல் ஆறு வீதியை சுத்தம் செய்து வெள்ள நீரில் பாதிக்கப்பட்டிருந்த பகுதியை சரிசெய்தனர். இதேபோல், 573 வது பிரிகேட்டின் 9 விஜயபாகு காலாட் படை படையினர் பெரும் மழை காரணமாக சேதமடைந்த மதடகுளம் கட்டை பழுதுபார்த்தனர்.

5 வது (தொண்டர்) இயந்திர காலாட் படை படையினர் 17 உறுப்பினர்களைக் கொண்ட 04 குடும்பங்களை பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். அவர்களில் சிலரை பத்தி மாதா தேவாலயத்தில் தங்க வைத்து திங்கள்கிழமை (7) வரை அவர்களுக்கு உணவு வழங்கினர். அதேபோல் 663 வது பிரிகேட்டின் 11 வது (தொண்டர்) கஜபா படையினர் நாச்சிகுடா-குமுளமுனை பாதை தடைப்பட்ட வடிகால் அமைப்பினை பொதுமக்களின் ஆதரவுடன் சரிசெய்து வெள்ளம் ஏற்படுவதை தவிர்த்தனர்.

வாளிமண்டல திணைக்களத்தின் எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வன்னி பகுதிக்கு விரைந்து சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து படைகளையும் நிவாரண பணிக்கு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார். Running Sneakers Store | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov