Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2020 23:10:58 Hours

தனியார் துறை வைத்தியசாலைகளில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக மருத்துவ ஆலோசகர்கள் ஆராய்வு

ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட மருத்துவ நிபுணர்களின் உயர்மட்டக் குழுவினர், கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் இன்று (3) இராணுவத் தலைமையகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டதோடு, கொவிட்-19 நோயாளிகள் விரும்பினால் அவர்களை தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

குறித்த தூதுக்குழுவில் அறுவை சிகிச்சை நிபுணத்துவ ஆலோசகர் டெக்டர் மாயா குணசேகர, ஆலோசகர் மருத்துவர் (பேராசிரியர்) அர்ஜுன டி சில்வா, மகளிர் மருத்துவ நிபுணர் (பேராசிரியர்) ஹேமந்த தோடம்பஹல, உட்சுரப்பியல் நிபுணர் (பேராசிரியர்) பிரசாத் கட்டுலந்த மற்றும் ஆலோசகர் மருத்துவர் டொக்டர் எராங்க நாரங்கொட ஆகியோர் அடங்குவர். தனியார் மருத்துவ வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற விரும்பும் வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்று அந்த மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிட்டனர், ஏனெனில் இதன் மூலம் அரச துறைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கவும், குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு அதிக இடத்தை உருவாக்கவும் முடியும்.

இது தொடர்பாக ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னர், குறித்த ஆலோசனைகள் விரைவில் நொப்ப்கோ பணிக்குழு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு உறுதியளித்தார். பின்னர் குறித்த மருத்துவக் குழுவினர் கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பணிகள் தொடர்பான தற்போதைய நிலைமையினை நொப்கோ தலைவரிடமிருந்துறிந்து கொண்டனர். Best jordan Sneakers | Nike