Header

Sri Lanka Army

Defender of the Nation

27th November 2020 17:33:17 Hours

இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி இணைந்து இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகரை வரவேற்றல்

இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பக்லே அவர்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுடன் இணைந்து 27 ஆம் திகதி காலை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வந்திரங்கிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) ஸ்ரீ அஜித் டோவல் மற்றும் அவரது தூதுக்குழுவை வரவேற்றார். பின்னர் (27) பிற்பகல் நடைபெற்ற 4 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலை முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாள் (27-28) கூட்டத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமான மாலைதீவு மற்றும் இலங்கையில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்படும்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) ஸ்ரீ அஜித் டோவல் தலைமையிலான இந்திய தூதுக்குழுவில் பிரதி இராணுவ ஆலோசகர் ரியர் அட்மிரல் (ஓய்வு) மோன்டி கன்னா, திரு அமித் நாரங், திரு அக்ஷே ஜோஷி, திரு அகிலேஷ் ஜிண்டால் மற்றும் செல்வி தெஜால் சாந்தன் ஆகியோர் அடங்குவர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் 4 வது முத்தரப்பு கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மாலத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மரியா டிதி மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன ஆகியோர் கலந்து கொள்கின்றனர். குறித்த அமர்வுகளில் பிரதிநிதிகளாக பங்களாதேஷ், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இந்திய தூதுவர்கள், மேஜர் ஜெனரல் பிரதீப் சில்வா, இராணுவ பொது பதவி நிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரதீப் சில்வா உள்ளிட்ட பல சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் இந்திய தூதுக்குழுவை விமான நிலையத்தில் வரவேற்றனர். முதல் இந்தியா முத்தரப்பு கூட்டம் 2011 ஆம் ஆண்டில் மாலைதீவிலும், இரண்டாவது 2011 ஆம் ஆண்டில் இலங்கையிலும் மூன்றாவது 2014 இல் இந்தியாவிலும் நடைபெற்றது.

குறித்த இரண்டு நாள் அமர்வுகளில் கடல்சார் பாதுகாப்பு, சட்ட ஆட்சிகள், பயிற்சி, தேடல் மற்றும் மீட்பு, மாசுபாடு, தகவல் பகிர்வு, கடத்தலை தடுப்பது, போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் இந்திய கடல் பிராந்தியத்தில் தடைசெய்யப்பட்ட கடத்தல் போன்ற பலவிதமான விடயங்கள் கவணத்தில் கொள்ளப்படும். Best Authentic Sneakers | New Balance 991 Footwear