Header

Sri Lanka Army

Defender of the Nation

07th November 2020 00:00:35 Hours

புதிய வான் படைத் தளபதி இராணுவத் தளபதியை சந்தித்தார்

வான் படையின் 18 வது தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன இன்று (5) பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை மரியாதை நிமித்தம் சந்திப்பதற்காக இராணுவத் தலைமையகத்திற்கு வந்தபோது இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.

இராணுவத் தலைமையகத்திற்கு அவர் வருகை தந்ததும் இராணுவத் தலைமையக பட்டாலியன் கட்டளை அதிகாரி கர்னல் இந்திக்க பெரேரா முறைப்படி நுழைவாயிலில் வரவேற்றார் பின்னர் அங்கு இராணுவ மரபுகளுக்கு ஏற்ப பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு வரவேற்றகப்பட்டது.

பின்னர் இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சேன வடுகே அவர்களால் வரவேற்கப்பட்டு வருகை தந்த வான் தளபதியை கெமுனு ஹேவா படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு கௌரவத்திற்கு அழைத்துச் சென்றார்.

தளபதியின் செயலகத்திற்கு பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய வானப்படைத் தளபதியை அன்புடன் வரவேற்றதுடன் இராணுவ பிரதான பதவிநிலை அதிகாரிகள் மற்றும் பிறரை வானப்படைத் தளபதிக்கு அறிமுகப்படுத்தினார்.

ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் இராணுவத் தளபதி அலுவலகத்தில் கலந்துரையாடினர் இதன்போது கடமைகள் மற்றும் பொறுப்புகளில் பல்வேறு துறைகளில் இராணுவம் மற்றும் விமானப்படை இடையே நிலவிய நெருக்கமான ஒத்துழைப்பு, கடந்த காலங்களில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சிறந்த பங்களிப்பு என்பவற்றை இருவரும் நினைவு கூர்ந்தனர். இந்த மரியாதைக்குரிய அழைப்பின் போது அவர்கள் இருவரும் தங்கள் அமைப்புகளின் பரஸ்பர விஷயங்கள் குறித்தும் கருத்து பரிமாற்றிக் கொண்டனர். இறுதியில் இருவரும் இன்றைய சந்திப்பின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.

ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன இராணுவத் தலைமையகத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பதாக தளபதி அலுவலகத்தில் உள்ள விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது கருத்தை பதிவிட்டார்.

1965 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி பிறந்த ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன கண்டி தர்மராஜ கல்லூரியின் பெருமைமிக்க உருவாக்கமாகும். 1985 ஜூலை மாதம் 2 ஆம் திகதி பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக் கொண்ட அவர் தனது அடிப்படை பயிற்சியினை தியதலவையில் முடித்தார், 14 வது பயிலிளவல் அதிகாரி பாடநெறியின் சிறந்த பயிலிளவல் அதிகாரி விருதைப் பெற்றார். பாகிஸ்தான் விமானப்படையில் மேலதிக பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தொகுதி விமானிகளில் ஒருவராக இருந்த அவர் பாகிஸ்தான் விமானப்படையின் சிறந்த நட்பு விமான பயிலிளவல் அதிகாரிக்கான விருதைப் பெற்றவர்.

அவரது கறைபடாத மற்றும் புகழ்பெற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக, ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரணவிக்கு “விஷிஷ்ட சேவ விபுஷனய” மற்றும் “உத்தம சேவா பதக்கம” வழங்கப்பட்டுள்ளது. மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவர் செய்த மகத்தான மற்றும் தன்னலமற்ற பங்களிப்புக்காக ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன எட்டு சந்தர்ப்பங்களில் விர பதக்கங்களால் (வீர விக்ரம விபூஷனய’ இரண்டு முறை, ‘ரண விக்ரம பதக்கம’ இரண்டு முறை, ‘ரண சூர பதக்கம’ நான்கு முறை) கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன மூன்று விமான தளங்களுக்கு கட்டளையிட்டுள்ளார், அதில் வான்படை கல்வியற் கல்லூரியின் பதவிக்காலமும் அடங்கும். அவர் இப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், 2017 ஆம் ஆண்டிலிருந்து வான்படை நிர்வாக பேரவையின் விமான செயற்பாட்டு பணிப்பாளராக செயற்பட்டார்.Mysneakers | Air Jordan Release Dates 2020