Header

Sri Lanka Army

Defender of the Nation

06th November 2020 20:03:08 Hours

அரசு ஆதரவுடன் விவசாய பணிப்பகம் மஞ்சள் பயிர்செய்கை

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனம் மற்றும் இராணுவத் தளபதியின் துரு மிதுரு நவரட்டக் திட்டத்திற்கு ஏற்ப மரக்கறிகள், அரிசி, முட்டை , பால் பொருட்கள், தானியங்கள் , பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவற்றில் இராணுவம் எதிர்காலத்தில் தன்னிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கொவிட் 19 காரணமாக இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் ஆசிய உணவு தயாரிப்பிற்கு இன்றியமையாத மருத்துவ மதிப்புமிக்க மஞ்சள் பயிர் செய்கை இராணுவத்தில் விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சகத்துடன் இணைந்து இக்கூட்டு திட்டத்தின் ஊடாக சுமார் ரூபா 4 மில்லியன் பெறுமதி மிக்க 100,000 மஞ்சள் நாற்றுகளை நடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது, இதன் ஆரம்ப நிகழ்வு அம்பலாங்கொடை கோஹிலவகுரவத்தை இராணுவ பண்ணையில் விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் இந்திரஜித் கந்தனராச்சி, பெருந்தோட்டத் தொழில்கள் மற்றும் விவசாய ஏற்றுமதி துறை அமைச்சர் கௌரவ ரமேஷ் பதிரன மற்றும் விவசாய இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜனக வக்கும்புர ஆகியோரின் பங்குபற்றலில் வியாழக்கிழமை (05) இடம்பெற்றது.

5 வது (தொண்டர்) இலங்கை இராணுவ பொது சேவை படையின் படையினர் அம்பலாங்கொடையில் விதை மஞ்சள் பயிர்செய்கை திட்டத்தை முன்னெடுக்கின்றனர். வியாழக்கிழமை (5) உத்தியோகப்பூர்வ தொடக்க விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இதன் ஆரம்ப செயற்பாடான நிலத்தை தயார் செய்யும் செயற்பாடுகள் தொடங்கப்பட்டது. மஞ்சள் பயிர் செய்கை திட்டத்தின் கட்டம் ஒன்று பலல்ல இராணுவ பண்ணையிலும் கட்டம் மூன்று ரம்பகன் ஓயா இராணுவ பண்ணையிலும் விஸ்த்தரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு இணையாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் விவசாய ஏற்றுமதி அமைச்சின் ஒத்துழைப்புடன் 200 ஏக்கர் நிலப்பரப்பில் மிளகாய் செய்கையும் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு செய்கையும் 500 ஏக்கர் நிலப்பரப்பில் டி.ஜே. மாங்கன்றுகளும் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை ஆகியவற்றை பயிரிட திட்டமிட்டுள்ளது. பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் மன்னார் சிலாவத்துறை பகுதியில் விவசாய சுற்றுலா மண்டலத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்தோடு இராணுவ பண்ணைகளுக்குள் சிறிய அளவிலான கரும்பு, சோளம், மரமுந்திரி, மிளகு, கறுவாபட்டை, கராம்பு, வெற்றிலை போன்ற பயிர்செய்கைகளின் மேம்பாட்டிற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மஞ்சள் பயிரிட முடியும் என்றாலும், புள்ளி விவரங்களின்படி, இலங்கை ஆண்டு தோறும் 50,000 மெட்ரிக் தொன் மஞ்சளை நாட்டிற்கு இறக்குமதி செய்கிறது. ஆரம்ம்ப விழாவிற்கு அமைச்சின் அதிகாரிகள், அதிகாரிகள், படையினர் மற்றும் அம்பலாங்கொடை விவசாய அதிகாரிகள் பங்குபற்றினர். Running Sneakers Store | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos