Header

Sri Lanka Army

Defender of the Nation

01st November 2020 17:24:08 Hours

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நவம்பர் 9 ஆம் திகதி வரை தொடரும்- நொப்கோ தலைவர் தெரிவிப்பு

கொவிட்-19 பரவுவதற்கு எதிராக மேற்கு மாகாணத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேற்கு மாகாணத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொவிட்-19தொற்று நோயாளிகள் பதிவாகியுள்ளமையினால் திங்கள் (2) அதிகாலை 5.00 மணி முதல் அடுத்த வாரம் 2020 நவம்பர் 9 வரை தொடரும். இதேபோல், திங்கள்கிழமை (நவம்பர் 9) வரை குருநாகல்நகர் பிரதேசம், குல்லியாப்பிட்டி மற்றும் எஹெலியகொடை பொலிஸ் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமைய பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இன்று (1) பிற்பகல் 4.00 மணிக்கு இலங்கை ரூபவாஹினி மற்றும் ஏனைய தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்ட சிறப்பு அறிக்கையில் தெரிவித்தார்.நடமாட்டங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துவதன் மூலமும், சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும் இந்த முக்கியமான கட்டத்தில் ஒத்துழைக்குமாறு அவர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், அதே சந்தர்ப்பத்தில் நிகழ்சியில் பங்குபற்றிய சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க அவர்கள் குறிப்பிடுகையில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி திறன் கொடிய வைரஸை எதிர்க்கும் அளவுக்கு வலுவாக இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து பொதுமக்களிடம் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். முழு காணொளி தொகுப்பு இங்கே பின்வருமாறு: spy offers | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5