Header

Sri Lanka Army

Defender of the Nation

29th October 2020 16:00:31 Hours

'மெத் சந்த செவன' கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மூலிகை மருந்து வழங்கல்

வேகமாக பரவும் வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான உள்நாட்டு நடைமுறைகளைப் பயன்படுத்தும் நோக்கத்தோடு, ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளரான விஷ்வரதேனியார் நிறுவனமானது, நடவடிக்கை பணிப்பகத்துடன் இணைந்து பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையமத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம், கொழும்பு 15 இல் உள்ள 'மெத் சந்த செவன' தொடர்மாடிக் கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடையே விநியோகிப்பதற்காக 'லைஃப் கார்ட் ஆன்டிவைரல் மூலிகைகள்' உள்ளடங்கிய 800 போத்தல்களை நன்கொடையாக வழங்கியது.

உற்பத்தியாளர்களின் விரிவான ஆராய்ச்சியின் விளைவாக தயாரிக்கப்பட்ட இந்த மூலிகை வைரஸ்களைக் கொல்லவும் தொற்றுநோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் முடியும் என்று நம்பப்படுகிறது, இக்குறித்த தயாரிப்புநொப்கோ தலைவருக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் பரவலாக சோதிக்கப்பட்டு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை (31) நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திலக் ஹங்கிலிபொல அவர்களின் மேற்பார்வையில் விணியோகத்திற்காக 14 ஆவது படைப் பிரிவிற்கு குறித்த இருப்பினை வழங்கினார்.

14ஆவது விஜயபாகு காலாட்படை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஈ.எம்.எம்.எஸ்.கே ஏகநாயக்க மற்றும் 14 ஆவது விஜயபாகு காலாட்படை படையணியின் படையினர் மோதரை பொலிஸ் நிலைய உறுப்பினர்களுடன் சேர்ந்து அந்த மூலிகை மருந்து கொள்கலன்களை குறித்த நபர்களுக்கு விநியோகித்தனர். latest Running Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK